உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 13-12-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 13-12-2024 | Short News Round Up | Dinamalar

ருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் 4ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தீப திருநாளான இன்று அதிகாலை, கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை, 5:59 மணிக்கு அருணாசலேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரராக கோயில் உள்ளிருந்து மலையை நோக்கி பார்த்தபடி வெளியே வந்தார். அப்போது பரணி தீப விளக்கில் இருந்து, கோயில் கொடி மரம் எதிரில் உள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டது. அதில் இருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டது. தொடர்ந்து திருவண்ணாமலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டு வழிபட்டனர். 11 நாட்கள் எரியும் மஹா தீபம், 40 கி.மீ., துாரம் வரை தெரியும். தீப திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி