செய்தி சுருக்கம் | 08 PM | 20-05-2025 | Short News Round Up | Dinamalar
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு பதிலடியாக, கடந்த 7 ம்தேதி அதிகாலை பாகிஸ்தானில் துல்லிய தாக்குதலை நடத்தி பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. அதைத்தொடர்ந்து, இரு நாட்டுக்கும் 4 நாள் சண்டை நடந்தது. அப்போது, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலுள்ள குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. எல்லாவற்றையும் நடுவானிலேயே இந்தியா தாக்கி அழித்தது. எஸ் 400, ஆகாஷ் போன்ற வான்பாதுகாப்பு கவச வாகனங்களால் அது சாத்தியமானது. மக்களை குறி வைத்து தாக்கிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைத்துள்ள ராவல்பிண்டியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் அரசையும், ராணுவ அதிகாரிகளையும் நிலைகுலைய வைத்தது. பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் இந்திய படைகளின் வலிமை குறித்தும் விமானப்படையின் வான் பாதுகாப்பு பிரிவு டைரக்டர் ஜெனரல் சுமர் இவான் டி குன்ஹா Lieutenant General Sumer Ivan DCunha, சிறப்பு பேட்டியளித்தார். பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்க தேவையான தளவாடங்கள் இந்தியாவிடம் கைவசம் உள்ளன; ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவின் தாக்குதல் ரேஞ்சுக்குள்தான் range உள்ளது. பாகிஸ்தானிலுள்ள எந்த ஒரு மூலையையும் இந்தியாவால் தாக்க முடியும். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தை கைபர் பக்துன்க்வா மாகாணத்துக்கு மாற்றினாலும் கூட அடிப்போம்; அதுவும் எங்கள் தாக்குதல் ரேஞ்சுக்குள்தான் உள்ளது என சுமர் இவான் டி குன்ஹா கூறினார். பைட் சுமர் இவான் டி குன்ஹா விமானப்படை அதிகாரி 4 நாள் நடந்த போரில் கிட்டத்தட்ட 1000 ட்ரோன்கள் மூலம் மக்கள் குடியிருக்கும் இடங்களை குறி வைத்து குண்டு வீச பாகிஸ்தான் ராணுவம் முயன்றது. ஆனால், நடுவானிலேயே நாம் வான் பாதுகாப்பு கவச வாகனம் மூலம் சுட்டு வீழ்த்தினோம்; பாகிஸ்தான் திட்டத்தை தவிடுபொடியாக்கி, உயிரிழப்பை தடுத்தோம் எனவும் சுமர் இவான் டி குன்ஹா கூறினார்.