இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | போர்க்கப்பலில் மோடி தீபாவளி | 8 PM | 20-10
பிரதமர் மோடி, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு தீபாவளியை, கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதமர் மோடி இனிப்பு ஊட்டி விட்டு வாழ்த்து கூறினார். வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, துணிச்சலான வீரர்களுடன் தீபாவளி கொண்டாவது எனது அதிர்ஷ்டம்; அதை பாக்கியமாக கருதுகிறேன். இந்த தருணம் மறக்க முடியாதது எனக்கூறினார். ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்கு தூக்கம் இல்லாத இரவுகளை கொடுத்தது. விக்ராந்த் என்ற பெயரே கேட்டு பாகிஸ்தான் நடுங்குவதை பார்த்தோம். போர் தொடங்குவதற்கு முன்பே எதிரியின் தைரியதை உடைக்கும். அதனுடைய வலிமை அப்படிப்பட்டது. இந்தியா மீதான நமது வீரர்களின் நேசம் தான், நமது கப்பல்கள், விமானங்களின் பலம். ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டுகிறேன். முப்படைகளின் அற்புதமான ஒருங்கிணைப்புதான், ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானை விரைவில் மண்டியிட செய்தது. 10 ஆண்டுகளில் நமது ராணுவ தளவாட உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 முதல் 40க்கு மேற்பட்ட உள்நாட்டு போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை கடற்படைக்கு வழங்கியுள்ளது. பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூரில் அதன் திறமையை காட்டின. உலக நாடுகள் இந்த ஏவுகணையை வாங்க விரும்புகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் நமது ராணுவ தளவாட ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். #PmModi #INS Vikrant #ModiDiwaliCelebration #ModiwithNavy