உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | ஸ்டாலின் கடிதம் | 8 PM | 24-01-2026

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | ஸ்டாலின் கடிதம் | 8 PM | 24-01-2026

துணை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் ஆணையம், அடுத்த கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு, நீட் தேர்வை கட்டாயமாக்கி உள்ளது. அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். ஏற்கனவே எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான நீட் தேர்வை தமிழக அரசு உறுதியாக எதிர்த்து வருகிறது. எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் முதல்படிதான் இது, என்பது தெளிவாக தெரிகிறது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நீட் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு தகுதியாக நிர்ணயித்திருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. இது நீட் தேர்வை நாடு முழுதும் விரிவுபடுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டதாக தெரிகிறது. துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள்ளேயே நீடிக்கவேண்டும். எனவே, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்த நடவடிக்கையை கைவிடுமாறு தேசிய துணை மருத்துவ ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் இந்த விஷயத்தின் அவசர தன்மையை கருத்தில்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜன 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ