உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | சுப்ரீம் கோர்ட் மறுப்பு | 8 PM | 10-10-2025

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | சுப்ரீம் கோர்ட் மறுப்பு | 8 PM | 10-10-2025

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிக பணம் தருவதாக கூறி விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி புரோக்கர்கள் கிட்னி திருட்டில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவின்பேரில், புரோக்கர் ஆனந்தன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தமிழக அரசின் சுகாதாரத்திட்ட இயக்குநர் வினித் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. அதில், திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கிட்னி தான முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணை குழு அளித்த அறிக்கையின் பேரில், இரு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு மருத்துவமனைகளும் ஆளுங்கட்சியினருக்கு சொந்தமானவை. பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையை மணச்சநல்லுார் தி.மு.க. எம்.எல்.ஏ. கதிரவனின் குடும்பம் நிர்வகிக்கிறது. திருச்சி மருத்துவமனை திமுக பிரமுகருக்கு தொடர்புடையது. இதனால் இந்த வழக்கை தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்கை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த குழுவுக்கான அதிகாரி நியமனத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நாங்கள் தரும் அதிகாரிகள் பட்டியலில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், கிட்னி முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்த ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். #SupremeCourt #TamilNadugovernment #SIT #kidneytheftcase #DMK #BJP #Highcourt

அக் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை