செய்தி சுருக்கம் | 08 PM | 27-06-2024 | Short News Round Up | Dinamalar
பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அரசின் கடந்த கால சாதனைகள், வரும் காலங்களில் செய்யப்போகும் திட்டங்கள் குறித்த அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. ஜனாதிபதியின் உரை குறித்து, பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரை வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான பாதையை காட்டும் வகையில் அமைந்திருந்தது. நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதையும், நாட்டின் எதிர்காலம் குறித்த அம்சங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் ஜனாதிபதியின் உரையில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன என, பிரதமர் மோடி டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.