தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 SEP 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
திருச்சியில் Jabil நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ.666 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்க முதலீடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்கிறார் பிரேமலதா . மெரினா கடற்கரையில் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதால், கடலரிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை ஆய்வு செய்கிறது. இந்நிலையில் இதுகுறித்த வழக்கில் திட்டத்தை செயல்படுத்துவரே, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினால், அது நியாயமானதாக இருக்குமா? என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது அதிமுக பாவம் ஊசலாடி கொண்டிருக்கிறது. நாம் கூப்பிட்டால் வந்து விடுவார்கள் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.