தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 SEP 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
அமெரிக்க பயணம் பெரிய வெற்றி : ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் அமெரிக்க பயணத்தை குறைகூறுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ----- அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? ஐகோர்ட் கேள்வி கோயில்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை கையாள்வதை தவிர, கோவில்களை பராமரிப்பதில் அறநிலையத்துறையின் பொறுப்புகள் குறித்து பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சேரன்மகாதேவியில் ராமசாமி பெருமாள் கோயில் முறையாக பராமரிக்கப்படவில்லை என தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளது. ------- வெங்காயம் ஏற்றுமதி குறைந்தபட்ச விலை ரத்து வெங்காயம் ஏற்றுமதிக்கான வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி குறைந்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு ரூ. 46 ஆயிரம் என்று இருந்ததை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அறிவித்துள்ளது. ----- குறைவான தீமையை தேர்வு செய்யுங்கள் : போப் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் வாழ்க்கைக்கு எதிரானவர்கள் என போப் கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், டிரம்பில் கத்தோலிக்கர்கள் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.