தினமலர் எக்ஸ்பிரஸ் | 26 SEP 2024 | 11 AM | Dinamalar Express | Dinamalar
#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் இளவரசன், வீடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். சிக்கன் கடைக்காரருடன் தகராறில் ஈடுபட்ட இளவரசன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் ஆபிஸ் எதிரே தர்ணாவில் ஈடுபட்டார். தடுக்க வந்த கலால் பிரிவு அதிகாரியை தாக்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். ----- தென்மேற்கு பருவ மழை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்துக்கான நீர் திறப்பையும், கர்நாடகா குறைத்துள்ளது. மாதவாரியாக நீர் திறப்பை பின்பற்றாமல், வெள்ள காலங்களில் நீர் திறப்பை அதிகரிப்பதை, கர்நாடகா வழக்கமாகக் கொண்டு உள்ளதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். ------ மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாலை பேய் மழை கொட்டித்தீர்த்தது. நகரின் பல்வேறு பகுதி சாலைகளில், தாழ்வான பகுதிகளில், வெள்ளம் தேங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.