தினமலர் எக்ஸ்பிரஸ் | 01 OCT 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இப்போது லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். லெபானானில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது கர்நாடகா தொழில் அதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் வாங்க சொன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நட்டா உள்ளிட்டோர் மீது திலக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நளின்குமார் கட்டீல் கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் மத்திய அமைச்சர் நிர்மலா, நட்டா, கட்டீல் உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணைக்கு அக்டோபர் 22 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல்வர் முக ஸ்டாலினை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகனுக்கு 2 வது இடமும் அவருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 3 வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து அமைச்சர்கள் கேஎன் நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, ஏவா. வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என ஏற்கனவே இருக்கும் வரிசைகள் தொடர்ந்துள்ளன.