தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 OCT 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். எக்ஸ் வலைதளத்தில் டிரம்பின் கணக்கிலிருந்து ஆட்டோமேட்டட் முறையில் குறிப்பிட்ட பயணர்களுக்கு ஆதரவு கேட்டு செய்தி அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த ரோஷன் ராய் என்பவருக்கு ட்ரம்ப் சார்பில் பதிவிட்டுள்ளதாவது, வடக்கு கரனோவில் இருந்து நான் உங்களுக்கு முக்கியமான தேர்தல் செய்தி அனுப்புகிறேன். வரும் 5ம் தேதி ட்ரம்புக்கு ஆதரவாக ஓட்டு போட தயாராகுங்கள் என பதிவிடப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த ரோஷன்ராய், நன்றி நீங்களும், கமலா ஹாரிசும் எனக்கு அதிபராக இருக்க முடியாது உண்மையில் நான் இந்தியாவில் வசிக்கிறேன் என அவர் பதிவில் கூறியுள்ளார். இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையோட்டி சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ம் தேதி போர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு பார்வையிட்டார். போர் விமான சாகச நிகழ்ச்சியில் 72 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. பொதுமக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.