தினமலர் எக்ஸ்பிரஸ் | 11 OCT 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
#Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin லாவோஸ் நாட்டில் நடக்கும் ஆசியான் - இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றுள்ளார். அவரை நியூசிலாந்து பிரதமர் லக்ஸான் சந்தித்து பேசினார். இந்தியாவின் மிகப் பெரிய ரசிகன் நான். நான் நேசிக்கும், பெரிதும் போற்றும் நாடு இந்தியா. இந்தியா-நியுசிலாந்து நாடுகளின் இரு தரப்பு பாதுகாப்பு, நட்பு, பலமான உறவுகள் குறித்து பிரதமருடன் பேசினேன் என லக்ஸான் கூறினார். தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேலக்கூடலூரில் மந்தையம்மன் கோயில் திருவிழா நடந்தது. இறுதி நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். சிவன், பார்வதி, அம்மன் வேடமணிந்து நேர்த்திக்கடனும் செலுத்தினர். சென்னை திருவேற்காடு, சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்திய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் 2 ஆயிரம் பொம்மைகளை கொண்டு பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டு இருந்தது. அதில் ராமாயணம், மகாபாரதம், ஜல்லிக்கட்டு திருவண்ணாமலை கிரிவலம் என எண்ணற்ற படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். பள்ளி மாணவர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடினர்.