உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 03-07-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 03-07-2025 | Short News Round Up | Dinamalar

திருபுவனம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று விசாரணையை தொடங்கினார். முதலில் திருப்புவனம் கூடுதல் சூப்பிரண்டு சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, நகை தொலைந்து போனது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட சிஎஸ்ஆர். மற்றும் எப்ஐஆர் ஆவணங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோயிலில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து, தனிப்படை போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வீடியோவை பதிவு செய்த கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், மடப்புரம் கோயில் அறநிலையத்துறை அதிகாரி, அலுவலக உதவியாளர் பெரியசாமி, கோயில் பணியாளர்கள் பிரவீன்குமார், வினோத்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார், கோயில் சிசிடிவி கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக நீதிபதி விசாரணை நடத்தினார்.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி