/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 09-07-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 09-07-2025 | Short News Round Up | Dinamalar
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் சுற்றுபயணத்தை துவக்கி உள்ளார். கோவையில் சுற்றுப்பயணம் செய்த அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாய்பாபா காலனியில் பெண்கள் மலர் தூவி பூரண கும்பத்துடன் வரவேற்றனர். வெங்கிட்டாபுரம் வாசுதேவன், பூஜா தம்பதி தங்களது 3 மாத பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டு கொண்டனர். குழந்தைக்கு லலிதா என அவர் பெயர் சூட்டினார். வடவள்ளி பஸ் ஸ்டாண்டில் பேசிய பழனிசாமி, மக்கள் பிரச்னையை தீர்க்க முடியாத பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்றார்.
ஜூலை 09, 2025