/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 22-07-2024 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 22-07-2024 | Short News Round Up | Dinamalar
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்த தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது. லோக்சாவில் நீட் வினாத்தாள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பணமிருந்தால், தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி எனப் பேசினார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வினாத்தாள் கசிந்ததற்கு ஆதாரம் இல்லை என்றும், சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
ஜூலை 22, 2024