மாவட்ட செய்திகள் | 23-11 -2024 | District News | Dinamalar
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டுள்ளன. முக்கட்டி பகுதியில் முகாமிட்டிருந்த ஆண் யானை மாலை 4 மணிக்கு சாலையில் இறங்கி நடந்து சென்றது. எதிரே பைக்கில் வந்தவர் பைக்கை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். இரவு நெலாக்கோட்டை பஜார் பகுதிக்கு 7 மணிக்கு வந்த மற்றொரு ஆண் யானை சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த காரை தந்ததால் அலேக்காக தூக்கி கீழே போட்டு மிதித்து சேதப்படுத்தியது. காட்டு யானை பஜார் பகுதியில் உலா வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த யானை ஏற்கனவே 2 கார்களை தாக்கி சேதப்படுத்தியது. காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் 30 வனப் பணியாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.