/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 01 PM | 04-01-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 01 PM | 04-01-2025 | Short News Round Up | Dinamalar
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பயநாயக்கன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் உள்ளது. அங்கு பாலாஜி என்பவர் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். பட்டாசு ஆலையில் 35 அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். பேன்சி ரக பட்டாசுகளுக்கு வேதிப்பொருட்களை கலவை செய்யும் போது உராய்வு காரணமாக திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் இடிந்து தரை மட்டமாகின. அதில் பணி செய்து கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் கருகி இறந்தனர். சிவகாசி, சாத்தூர் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அப்பயநாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜன 04, 2025