செய்திசுருக்கம் | 01 PM | 16-11-2024 | Short News Round Up | Dinamalar
சென்னை குன்றத்தூரை சேர்ந்த கிரிதரண் என்பவர் தனது வீட்டில் எலி தொல்லை காரணமாக தி நகரை சேர்ந்த பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை நாடினார். அந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அவரது வீட்டில் அதிகளவு எலி மருந்து, எலி பேஸ்ட் பயன்படுத்தி உள்ளனர். அதிகளவு மருந்தினால் ஏற்பட்ட நெடி காரணமாக கிரிதரன் அவரது மனைவி பவித்ரா, 2 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கிரிதரனின் குழந்தைகள் விஷாலினி மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இறந்தனர். கிரிதரண், பவித்ரா ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவன ஊழியர்கள் தினகரன், சங்கர் தாஸ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்குமாரை தேடி வருகின்றனர். இந்நிலையில் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து வேளாண்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.