செய்தி சுருக்கம் | 08 AM | 24-09-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai இந்தியாவிலேயே புல்லட் ரயில்கள் தயாரிக்க ஒப்பந்தம் இறுதியானது BEML எனப்படும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் பொதுத்துறை நிறுவனமாகும். கேரள மாநிலம் பாலக்காடு அருகே கஞ்சிக்கோட்டில் இயங்கி வருகிறது. பெங்களூரு, மைசூரு, கோளார்கனி ஆகிய இடங்களிலும் ஆலைகள் உள்ளது. மெமு ரயில் பெட்டிகள், பாசஞ்சர் ரயில் பெட்டிகள், ரயில் உபகரணங்கள். பாதுகாப்பு துறைக்கான உபகரணங்களும் தயாரித்து வருகிறது. இப்போது இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் தயாரிக்கும் பணி BEML வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எட்டு பெட்டிகள் கொண்ட இரண்டு புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளது. மணிக்கு 250 முதல் 280 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புல்லட் ரயில் இயங்கும். ஒரு புல்லட் ரயில் தயாரிக்க 200 முதல் 250 கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் ரயில் தயாரிப்பு பணிகள் முடித்து 2026ல் ரயில்வேக்கு அளிக்கப்படும் என BEML நிறுவனம் கூறியது.