செய்தி சுருக்கம் | 08 PM | 11-11-2024 | Short News Round Up | Dinamalar
குஜராத் மாநிலம் வட்தாலில் சுவாமி நாராயண் கோயில் நிறுவப்பட்ட 200வது ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சில் பங்கேற்று உரையாற்றினார். சுவாமி நாராயண் கோயில் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு 200 ரூபாய் வெள்ளி நாணயம் மற்றும் சிறப்பு ஸ்டாம்ப் ஆகியவற்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏனென்றால் எனக்கும், இந்த கோயிலுக்குமான தொடர்பு மிக நெருக்கமானது. நாட்டின் பொருளாதாரத்தை பெருக்க, உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பேசி வருகிறோம். நம் கனவு நனவாக வேண்டுமென்றால் நாம் அதிகமாக உழைக்க வேண்டும். நம்மை பிரித்தாள துடிக்கும் சக்திகள், மக்களை இனம், மதம், மொழி, ஜாதி, என பல வகைகளில் பிரிவினையை துாண்டிவிடுகின்றன. நாம் அந்த சக்திகளை இனம் கண்டு தோற்கடிக்க வேண்டும். அதற்கு முதலில் நம்மில் ஒற்றுமை அவசியம். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது. கல்வியில், தொழில்நுட்பத்தில் சிறந்த இளைஞர்களை உருவாக்க வேண்டியது நம் கடமை. உலகம் முழுதும் திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. இந்திய இளைஞர்களின் திறமை உலக நாடுகளை கவர்கின்றன. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் அந்நாட்டு தலைவர்கள், நம் இளைஞர்களின் திறமையை வியந்து பாராட்டுகின்றனர். ஏனென்றால் நம் இளைஞர்கள் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வகையில் சிந்தித்து செயலாற்றுகின்றனர். பிரயாக்ராஜில் விரைவில் கும்பமேளா நடக்க உள்ளது. நம் நாட்டில் நடக்கும் கும்பமேளாவை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வியந்து பார்க்கின்றனர். வெளிநாட்டவரை இதில் பங்கேற்க செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மோடி கூறினார். #செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai