உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 13-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 13-11-2024 | Short News Round Up | Dinamalar

#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp  #Dinamalar #modi #annamalai சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் விக்னேஷ், இவர் தனது தாயாருடன் கிண்டி அரசு மருத்துவமனைக்கு இன்று காலை 10 மணி அளவில் வந்தார். விக்னேஷின் தாய் ஒருவருடமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 3 மாதங்களாக கிண்டி மருத்துவமனையில் விக்னேஷின் தாய் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் இன்று முறையாக மருத்துவம் பார்க்கவில்லை என விக்னேஷ் தகராறு செய்துள்ளார். அவரது தாய்க்கு சிகிச்சை அளித்து கொண்டு இருந்த புற்றுநோய் சிறப்பு நிபுணர் மருத்துவர் பாலாஜியிடமும் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை இடது பக்க கழுத்தில் 2 முறை குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலாஜியை சக மருத்துவர்கள் மீட்டனர். அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற விக்னேஷை பொதுமக்கள் மடக்கி பிடித்து கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவர் பாலாஜிக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்திக்குத்து சம்பவத்தால் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காட்சி அளித்தது. விக்னேஷிடம் கிண்டி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி