செய்தி சுருக்கம் | 01 PM | 17-11-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai மதுரை விமான நிலையத்தில் விரிவாக்கப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்காக, அந்த பகுதியை சுற்றி உள்ள கிராம மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 130 பேர் போட்டியில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்ற 19 வயதான ரியா சிங்கா கலந்து கொண்டார். ஆரம்ப சுற்றுகளில் ரியா சிங்கா அசத்தினாலும் முதல் 12 இடங்களை பிடிக்க தவறினார். இதனால் இறுதிசுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் சுற்றில், டென்மார்க், வெனிசுலா, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து நாட்டு அழகிகள் பங்கு பெற்றனர். இறுதி சுற்றில், டென்மார்க்கின் விக்டோரியா கேர் (Victoria Kjaer) வெற்றி பெற்றார். இவர் 2024ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று, 73வது மிஸ் யுனிவர்ஸ் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு நிகரகுவாவைச் சேர்ந்த மிஸ் யுனிவர்ஸ் 2023 ஷெய்னிஸ் பலாசியோஸ் (Sheynnis Palacios) மகுடம் சூட்டினார். 2வது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மாவுக்கு (Cnidimma Adetshina) கிடைத்தது. 3வது இடத்தை மெக்சிகோவை சேர்ந்த மரியா பெர்னாண்டா (María Fernanda Beltrán) தட்டிச் சென்றார். இடம் கொடுத்த சின்ன உடைப்பு கிராம மக்கள் மாநகராட்சி எல்கைக்குள் தங்களுக்கு 3 சென்ட் இடம் மற்றும் வீடு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால், நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை கண்டித்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்ன உடைப்பு கிராம மக்கள் வீடுகளை காலி செய்ய 6 நாட்கள் அவகாசம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தினால் பணம் மட்டுமே கொடுக்க முடியும். மாற்று இடம் கொடுக்க முடியாது என்று மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.