செய்தி சுருக்கம் | 01 PM | 25-11-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் 20 வரை நடக்கிறது. பார்லிமென்ட் கூடுவதற்கு முன் பிரதமர் மோடி பேசினார். அரசியல் அமைப்பின் 75ம் ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் நிலையில் பார்லிமென்ட் கூடுவது சிறப்பானது. பார்லிமென்ட் கூட்டம் அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சபையை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. அனைத்து விஷயத்திலும் ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம். அதிகார பசி கொண்டவர்களை மக்கள் நிராகரித்து உள்ளனர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களில் சிலர், இடையூறு செய்து பார்லிமென்ட்டை முடக்க பார்க்கின்றனர். மக்கள் அவர்களில் செயல்களை பார்த்து, நேரம் வரும்போது அவர்களை தண்டிப்பார்கள். எதிர்க்கட்சியினர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பார்லிமென்ட் மாண்புகளை பின்பற்ற வேண்டும். பொறுப்புடன் செயல்படக்கூடிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். பார்லிமென்ட் நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதில் இந்தியாவின் சர்வதேச மரியாதையும் அடங்கியிருக்கிறது. இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் இடையூறு செய்வதால், அனைத்து கட்சிகளிலும் உள்ள புதிய எம்.பி.க்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்களின் உரிமைகளை சிலர் பறித்துக்கொள்கின்றனர். தொடர்ந்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் விவாதம் நடத்த அனுமதிப்பதில்லை. அவர்கள் ஜனநாயகத்தின் உணர்வுகளை புரிந்துகொள்வதும் இல்லை, மக்கள் விருப்பங்களின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வதில்லை. மக்கள் குறித்து அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. மக்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடைசியில் அவர்களால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எப்போதும் வாழவும் முடிவதில்லை என மேடி கூறினார்.