500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | Athletics | Championship
500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | Athletics | Championship கோவை நேரு ஸ்டேடியத்தில் தெற்கு குறுமைய போட்டி நடக்கிறது. 40 பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் களத்தில் உள்ளனர் பள்ளி கல்வித்துறை சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. நேற்று நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பெபின் டேவிட், அதித் மற்றும் ஹசன் முகமது ஆகியோர் வெற்றி பெற்றனர். 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஸ்ரீ வர்ஷன், மோனிஷ் ராஜ் மற்றும் கவின் ஆகியோர் முறையே மூன்று இடங்களை பிடித்தனர். மாணவியருக்கான குண்டு எறிதல் போட்டியில் அனாமித்ரா, சுபஸ்ரீ மற்றும் சுதாசினா வெற்றி பெற்றனர். நீளம் தாண்டுதலில் தீப்னி, சந்தோஷ் பிரியா மற்றும் ரிஷிகா முதல் மூன்று இடங்களை வென்றனர். உயரம் தாண்டுதலில் ஷிர்லி, பிரவீனா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். தொடர்ந்து போட்டி நடக்கிறது. விறுவிறுப்பாக நடைபெறும் போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.