மேட்டுப்பாளையம் குறுமைய போட்டிகள் தொடக்கம் Mettupalayam |Coimbatore |School Sports
மேட்டுப்பாளையம் குறுமைய போட்டிகள் தொடக்கம் Mettupalayam |Coimbatore |School Sports பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேட்டுப்பாளையம் பள்ளிகளுக்கான 67-வது குடியரசு தின விழா குறுமைய விளையாட்டுப் போட்டிகள் , கோவை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கின. தொடக்க விழாவில், பாரத் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சசிகுமார் கலந்து கொண்டு மாணவ, மாணவியரை வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் பல்வேறு ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, போட்டிகளில் விறுவிறுப்பாக பங்கேற்றனர். இதன் இறுதிப் போட்டிகள் நாளை நடைபெற உள்ளன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குநர் ஓம் பிரகாஷ் ஒருங்கிணைத்தார்.