கோவை நேரு ஸ்டேடியம் களைகட்டியது | CM Cup | Athlatics Match | Nehru Stadium | Covai
கோவை நேரு ஸ்டேடியம் களைகட்டியது | CM Cup | Athlatics Match | Nehru Stadium | Covai முதல்வர் கோப்பைக்கான அனைத்து பிரிவினர் பங்கேற்கும் தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது. போட்டிகளை கோவை மாவட்ட தடகளச் சங்கச் செயலாளர் சம்சுதீன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 2500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் நின்தாத் முதலிடம் வென்றார். மாணவியர் பிரிவில் சுசித்ரா முதலிடம் வென்றார். கல்லூரி மாணவர்கள் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லூரி யோகேஸ்வர் முதலிடம் வென்றார். மாணவிகள் 3000 மீட்டர் பிரிவில் கே பி ஆர் கல்லூரி மாணவி ஹேமாதி முதலிடம் வென்றார். தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றது.