உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / விருதுகளை குவித்த வீரர், வீராங்கனைகள் |Beach Volleyball Tournament|Covai

விருதுகளை குவித்த வீரர், வீராங்கனைகள் |Beach Volleyball Tournament|Covai

கோவை எஸ். எஸ். குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கான பீச் வாலிபால் போட்டிகள் சின்னவேடம்பட்டி டி. கே.எஸ்.,பள்ளி மைதானத்தில் இன்று நடந்தது. 50-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் கலந்து கொண்ட போட்டிகளை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார். 14, 17 மற்றும்19 வயதுக்கு பிற்பட்ட பிரிவினர்களுக்கான மாணவர், மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். 14 வயது மாணவர் பிரிவில் டி.கே. எஸ் மெட்ரிகுலேஷன் மற்றும் ஆதித்யா பப்ளிக் பள்ளி அணி மோதியதில் 2-0 என்ற புள்ளி கணக்கில் டி.கே.எஸ் பள்ளி அணி வெற்றி பெற்றது. 17 வயது மாணவிகள் பிரிவில் வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணி மற்றும் சுவாமி விவேகானந்தா பள்ளி அணியில் மோதியதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது. 19 வயது மாணவர்கள் பிரிவில் வையம்பாளையம் சுதந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி அணி, கணேசபுரம் புனித ஆன்டனிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி அணிகள் மோதியதில் புனித ஆன்டனிஸ் பள்ளி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தினேஷ் குமார் ஒருங்கிணைத்தார். இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் பள்ளிகளுக்கு மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது.

செப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி