நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு | Hockey Tournament| Coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட ஹாக்கி போட்டி நடைபெற்றது. ஹாக்கி யூனிட் ஆஃப் நீல்கிரீஸ் அமைப்பு மற்றும் சத்ய சாய் சேவா மாருதி அறக்கட்டளை சார்பில் போட்டி நடத்தப்பட்டது. இரண்டு மாதங்களாக நடைபெற்ற டோர்னமென்டில், சுமார் 85 போட்டிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். A, B மற்றும் C என மூன்று டிவிஷன்களாக போட்டி நடைபெற்றது ஆலோரை அணி, பேரட்டி அணி மற்றும் தியான் சந்த் அணியினர் டிவிஷன் வாரியாக முதலிடம் பெற்றனர் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு 25,000 ரூபாய் மற்றும் இரண்டாம் பரிசு 15000 ரூபாய் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு மெடல், சான்றிதழ் மற்றும் சுழற் கோப்பை வழங்கினர். பரிசளிப்பு விழாவிற்கு உபதலை சத்யசாய் சேவா மாருதி அறக்கட்டளை சுவாமி மேகநாத் சாய் தலைமை வகித்தார். எம்.ஆர்.சி சர்வதேச தடகள வீரர் லட்சுமணன், ஹாக்கி அனிதா, ராஜேஷ் ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ் சமைப்பு தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.