உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / 14 அணிகள் பங்கேற்பு | Nilakottai | South District Kabaddi Tournament | Ottanchatram Team Impresses

14 அணிகள் பங்கேற்பு | Nilakottai | South District Kabaddi Tournament | Ottanchatram Team Impresses

14 அணிகள் பங்கேற்பு | Nilakottai | South District Kabaddi Tournament | Ottanchatram Team Impresses திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அன்னை தெரசா பல்கலை சார்பில் மகளிர் கல்லூரிகளுக்கு இடையிலான கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த 14க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் பாஸ்கரன் போட்டிகளை துவக்கி வைத்தார். நாக் அவுட் முறையில் 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் 3ம், 4ம் இடத்திற்கான போட்டியில் , கம்பம் ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கல்லூரி அணியை திண்டுக்கல் எம்விஎம் பெண்கள் கல்லூரி அணி 26:14 புள்ளிகளில் வென்றது. இறுதி போட்டியில் பழநி ஆண்டவர் பெண்கள் கலைக்கல்லூரி அணியை 22:15 என்ற புள்ளிகளில் ஒட்டன்சத்திரம் சக்தி கல்லூரி கபடி அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் பாஸ்கரன் கோப்பைகளை வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி செய்தது.

அக் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை