போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள் | Coimbatore | Rice Athletics Competition
போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள் | Coimbatore | Rice Athletics Competition | 780 Students Participate கோவை ரீஜினல் அசோசியேஷன் ஆப் இன்டர்நேஷனல் ஸ்கூல்ஸ் சார்பில், இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது. 35 பள்ளிகளைச் சேர்ந்த 780 மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஓட்டம், உயரம் தாண்டுதல், கிரிக்கெட், பந்து எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் போட்டி மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் ரைஸ் RAIS குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்டர்நேஷனல் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், நடுவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.