உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / பப்பிகளின் ஜாலிக்காக ஓரிடம்

பப்பிகளின் ஜாலிக்காக ஓரிடம்

''அபார்ட்மென்ட்டிற்குள் அடைபட்டு காலை, மாலையில் உரிமையாளருடன் வாக்கிங் சென்று, சிறிது நேரம் மட்டுமே வெளியுலகை எட்டிப்பார்க்கும் பப்பிகள், இயற்கையில் இளைப்பாறி, உருண்டு, புரண்டு, ஓடி, தாவி, குதித்து, குதுாகலிக்க ஓரிடம் வேண்டுமென நினைத்து தான், பப்பிகளுக்கான பார்க் உருவாக்கினோம்,'' என்கின்றனர், இதன் நிறுவனர்கள் தேவிஸ்ரீ மற்றும் வித்யா.இவர்கள், செல்லமே பக்கத்திற்காக, நம்மிடம் பகிர்ந்தவை:கர்நாடக மாநிலம், பெங்களூரு, தேவனஹள்ளியில், 32,000 சதுர அடியில் , 'தி சென்ட்ரல் பார்க்' (The Scentral Park) அமைத்துள்ளோம். பிரத்யேகமாக பப்பிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இப்பார்க்கில் நிறைய மரங்களுடன், வாக்கிங் ஏரியா, நீச்சல் குளம் உள்ளது. ஆர்கானிக் முறையில், தோட்டப் பராமரிப்பு செய்வதால், மூலிகை செடிகளின் வாசத்தில், இயற்கை சூழலில் பப்பிகள் விளையாடலாம்.பொதுவாக, பெங்களூருவில் அப்பார்ட்மென்ட் வீடுகள், நெரிசல் மிகுந்த சாலைகளால், செல்லப்பிராணிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதில் எக்கச்சக்க சிரமங்கள் இருக்கின்றன. இதனால், பப்பிகள் ரிலாக்ஸாக விளையாடும் வகையில், பார்க் வடிவமைத்தோம். குறிப்பிட்ட நேரத்தில், 5 பப்பிகள், 10 நபர்களை மட்டுமே அனுமதிக்கிறோம். அப்போது தான், அவை சுதந்திரமாக சுற்றி விளையாடும்.பப்பி ஏறி குதித்து விளையாட, சில அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம். மணலில் உருண்டு விளையாடி, களைத்து போகும் நேரத்தில், குளத்தில் குதித்து ரிலாக்ஸாக அவை நீந்தும். இங்கு கொண்டுவரும் பப்பிகள் முறையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்த பிறகே அனுமதிப்பதால், மற்ற பப்பிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாது. பப்பிகளுக்கு பிரத்யேக உணவகம், உரிமையாளர்களுக்கு தனி கேண்டீன் வசதி இருப்பதால், ஓய்வு நாளில் இங்கு வந்து, உங்கள் பப்பியுடன் நேரம் செலவிடலாம்.தொடர்புக்கு:scentralpark.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

angelrose 3233vka
ஜன 16, 2025 05:00

இளம் வயது ஏழ்மை மகன் கவிதை. தாயின் செயல்பாடு புரியாத வயசு தந்தை தன்னை விட்டு பிரிந்ததை எண்ணி கலக்கி மனசு- தன்மானத்தை காக்க தனது மகனை அனாதை ஆக்க தந்தைக்கு விருப்பம் இல்லை தன்மகனை காக்க விரும்பினான் தன்னை சுற்றி உள்ள எதிரிகளின் பொருளாதார தடையை நீக்கி தன் மகனை காக்க தெரியாமல் வருந்தினான் தந்தைமகன் பருவத்தை அடைந்தான் அவன் கண்ணில் ஒளி திரையில் கண்டான் தாயின் லீலைகளைதந்தை இளந்தது தன்னை மட்டுமல்ல தனது தன்மானதையும் கண்ணீர் விட்டான் அவன் தந்தை இல்லை தனக்காக அவமானத்தை சுமந்து. வாழ்ந்த தெய்வம் என்பதை உணர்ந்து கண்ணீர் விட்டான் மகன்,,,, எழுத்தாளார் வே.கதிரேசன்


சமீபத்திய செய்தி