உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / டாக்டர்ஸ் கார்னர்: சிறுநீர் கழிக்க சிரமப்படுகிறதா?

டாக்டர்ஸ் கார்னர்: சிறுநீர் கழிக்க சிரமப்படுகிறதா?

என் பப்பிக்கு (சிட்ஜூ ப்ரீட்) சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி, சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் கற்கள் உருவாகாமல் இருக்க எப்படி பராமரிக்கணும்?

- ஆர்.வினோதினி, திருப்பூர்.மனிதர்களை போலவே, பப்பிக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாக முக்கிய காரணம், குறைந்தளவு தண்ணீர் குடிப்பது தான். சிலர் பப்பிக்கு, அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளை தருவதாலும், கற்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. சரிவிகித உணவு முறையை கடைபிடிப்பது அவசியம். பப்பிக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகியிருப்பதை, ஆரம்பநிலையில் அறிந்தால், மருந்து, மாத்திரைகள் மூலமாக, அதை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிட முடியும். திடீரென எடை குறைதல், சிறுநீர் கழிக்க சிரமப்படுதல், குறைவாக சிறுநீர் கழித்தல், சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறி இருந்தால், உடனே கால்நடை மருத்துவரை அணுகி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை என ஏதாவது ஒன்றின் வாயிலாக, சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.பெரிய அளவில் கற்கள் இருந்தால், அறுவை சிகிச்சை வாயிலாகவே வெளியேற்ற முடியும். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கற்கள் உருவாகாமல் தடுக்க, அதிக தண்ணீர் குடிக்க வைப்பது அவசியம். இளநீர், மோர், ஜூஸ் கொடுக்கலாம். உணவில் புரோட்டீன் அளவை, மருத்துவர் பரிந்துரைப்படி குறைத்து கொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை, பரிசோதனை செய்து கொள்வது நல்லது.பொதுவாக, சிட்ஜூ, லசாப்சோ, யார்க் ஷயர் டெரியர், பக் போன்ற சிறிய வகை பப்பிகளுக்கு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவ்வகை பப்பி வளர்ப்போர், அதன் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்.- ஆர். நித்தின்குமார், கால்நடை மருத்துவர், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை