நீரிலும், நிலத்திலும் வாழும் ஆமைகளை வீட்டில் வளர்த்தால், அதற்கு இரண்டிலும் இருப்பதற்கான அமைப்பை உருவாக்கி தர வேண்டும். எப்போதும் அதை ஆக்டிவ்வாக வைத்திருக்க, அதனுடன் சிறிது நேரம் செலவிட வேண்டும். அவை கீரைகளை விரும்பி சாப்பிடும் என்பதால், துளைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பில், அதை நிரப்பி வைக்கலாம். பந்தை உருட்டியபடியே சாப்பிட்டு கொண்டே விளையாடும். இது, ஆன்லைனிலும், கடைகளிலும் கிடைப்பதால், உடனே வாங்கிடுங்க. * கூண்டில் தனியாகவே சிறகடிக்கும் பறவை, தன் அலகால் எதையாவது கொத்தி கொண்டே இருக்கும். அச்சமயத்தில், இந்த பந்தை வாங்கி கொடுக்கலாம். இது, தென்னை, பனை ஓலையால் செய்யப்பட்டது. உணவாக நினைத்து, இரு கால்களாலும் பந்தை பிடித்து பறவை கொத்தும் போது, அது மகிழ்ச்சியாக ஒலி எழுப்புவதை நீங்கள் காணலாம். இது, ஆன்லைன் மற்றும் கடைகளில் கிடைக்கிறது. நேரமும், ஆர்வமும் இருந்தால், நீங்களே வீட்டில் இதை தயார் செய்யலாம். * ஊர்வன வகைகளில் வித்தியாசமான செல்லப்பிராணியாக பலரும் வளர்ப்பது இந்த தாடி வைத்த டிராகனை தான். இதை துளையிடப்பட்ட, மூடிய கண்ணாடி பெட்டிக்குள் வைத்து வளர்க்கலாம். இவை விளையாடி கொண்டே சாப்பிடும் வகையில், வித்தியாசமான பொம்மைகள் கடைகளில் கிடைக்கின்றன. உருளை வடிவிலான இப்பொம்மையில் துளைகள் போடப்பட்டிருக்கும். உணவை இதில் நிரப்பினால், டிராகன் அதை தள்ளும் போது, கீழே விழுவதை எடுத்து சாப்பிட்டு, விளையாடி கொண்டிருக்கும். * எலி, முள்ளெலி போன்ற செல்லப்பிராணிகள், எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். இவற்றுடன் நேரம் செலவிட முடியாதவர்கள், சந்தையில் கிடைக்கும் சில விளையாட்டு பொருட்களை வாங்கலாம். இதில், ஸ்டாண்டுடன் கூடிய புட் பவுல், சிறந்த தேர்வாக இருக்கும். இதில் ஏறி சுற்றினால், துளைகள் வழியாக உணவு சிதறும். அதை கொறித்தபடியே, எலிகள் சுறுசுறுப்பாக சுற்றி கொண்டிருக்கும்.