போவோமா ஊர்கோலம்
ஹாம்ஸ்டர், கினியாபிக் போன்ற சிறிய வகை செல்லப்பிராணிகள் துறுதுறுவென இருப்பதால், வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது அவ்வளவு எளிதல்ல. இதற்காக தற்போது மார்கெட்டில் பிரத்யேக கேரியர் கேஜ் கிடைக்கிறது. இது, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளதால் உள்ளே உங்கள் செல்லப்பிராணி என்ன செய்து கொண்டிருக்கிறது என அடிக்கடி பார்த்து கொள்ளலாம். அவையும் வேடிக்கை பார்த்தபடியே பயணிக்கும். வெளியில் தப்பி ஓடாமல் இருக்க, மேல்புறத்தில் லாக்கர் வசதி இருக்கிறது. தண்ணீர் பாட்டில் உடன் இணைத்திருப்பதால் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ளலாம். இது வெவ்வேறு அளவுகளில், 1,500 ரூபாயில் இருந்து வாங்கலாம். அப்புறம் என்ன, ஆடர் செய்து வாங்கி, உங்க குட்டி செல்லத்துடன் ஊர் சுற்ற தயாராகுங்கள்.