வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விலை என்னவென்று சொல்லவில்லையே
மேலும் செய்திகள்
பறவை நோக்கலில்கல்லுாரி மாணவர்கள்
13-May-2026
அதிமுகவையே பின்னுக்கு தள்ளி விடுமா தவெக?
30-Apr-2026
Drishiyam 3 படம் எப்டி இருக்கு!
23-May-2026
மழலையின் மாயாஜலத்தையும், சுட்டித்தனத்தையும் அப்படியே வீட்டிற்குள் பிரதிபலிப்பதே, காலா காக்கட்டூ பறவையின் தனித்துவம் என்கிறார் கோவையை சேர்ந்த சுஹைப். பறவை ப்ரீடரான இவர் நம்மிடம் பகிர்ந்தவை: ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட, பிங்க் அழகி தான் இந்த காலா காக்கட்டூ. கழுத்து, அடிப்பகுதி இளங்சிவப்பாகவும், சிறகு முழுக்க சாம்பலாகவும் இருக்கும் சிறிய இன கிளி. அதீத சுறுசுறுப்பும், ஆற்றலும் கொண்டது. வீட்டில் யார், எப்படி பேசுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து, அப்படியே மிமிக்ரி செய்து காட்டும். அதீத புத்திசாலி, எப்போதும் விளையாடி கொண்டே இருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு ஏற்ற துணை. மழலையின் சுட்டித்தனத்தை ரசிக்க விரும்புகிறவர்கள், இப்பறவை வாங்கலாம். அதிகபட்சம் 400 கிராம் எடை தான் இருக்கும். நன்கு பராமரித்தால், 40-60 ஆண்டுகள் உயிர்வாழும். எல்லா தட்பவெப்ப சூழலிலும் வளரும் என்பதால், பராமரிப்புக்கு அதிக மெனக்கெட வேண்டியதில்லை. தானியங்கள், விதைகள், நட்ஸ், காய்கறிகள், கீரைகள் விரும்பி சாப்பிடும். உங்கள் மனநிலை அறிந்து அதற்கேற்ப உங்களோடு உறவாடுவதில் கில்லாடி. தோளில் அமர்ந்து, காதில் கீச்சிட்டு, எந்நேரமும் கதை பேசும் சிறகு முளைத்த குழந்தை போலவே வீட்டை வலம் வரும், என்றார்.
விலை என்னவென்று சொல்லவில்லையே
13-May-2026
30-Apr-2026
23-May-2026