உங்க செல்லங்களுடன் ஓரு பொன் மாலைப்பொழுது
ஆதரவற்ற செல்லப்பிராணிகளை பராமரிக்க நிதி திரட்டும் வகையில், பாகா (Pawga) மற்றும் ஹூமைன் அனிமல் சொசைட்டி (எச்.ஏ.எஸ்.,) இணைந்து, ஈவினிங் ஷோ நடத்துகின்றன.இன்று (பிப்., 8) மாலை 6:30 மணி முதல் 8:30 வரை, கோவை சாய்பாபா காலனியில் உள்ள, 'கபே சம்மர் 96'ல் திரைப்பட காட்சி நடக்கிறது. டிக்கெட் விலை 599. இதில், 100 ரூபாய் ஸ்நாக்ஸ் வாங்கி கொள்ளலாம். மீதமுள்ள தொகை, 'ஹாஸ்' தன்னார்வ அமைப்பின் கீழ் உள்ள, ஆதரவற்ற செல்லப்பிராணிகளுக்கான பராமரிப்புக்கு வழங்கப்படும் என்கிறார், பாகா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா.மேலும் அவர் நம்மிடம் பகிர்ந்தவை: இந்தியா முழுக்க, செல்லப்பிராணிகளுக்கு நிதி திரட்ட, ஓவியம் வரைதல், கலை பொருட்கள் உருவாக்குதல், யோகா பயிற்சியளித்தல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இதில் கிடைக்கும் தொகையை, அந்தந்த பகுதிக்கு உட்பட்ட, செல்லப்பிராணிகளை பராமரிக்கும் அமைப்புகளுக்கு வழங்குகிறோம். திரைப்படம் திரையிடலின் முதல் நிகழ்வு, கோவையில், இன்று நடக்கிறது. இங்கு செல்லப்பிராணிகளுடன் வந்து, ரிலாக்ஸாக படம் பார்த்து, ரம்மியமான மாலை பொழுதை, அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு, www.pawgapetsyoga.comஎன்ற இணையதளத்தை பார்வையிடலாம்.