உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / நண்பனை போல யாரு மச்சான்...!

நண்பனை போல யாரு மச்சான்...!

''இ வனுக்கு என்னை விட ஒரு வயசு தான் கம்மி. ஆனால், சேட்டையில் என்னையே மிஞ்சிடுவான். கண்காட்சியில் போட்டி வளையத்திற்குள் நின்றுவிட்டால் மட்டும், என் சொல் பேச்சை கேட்பான்,'' என, தன் 'பக்' இன பப்பியை காட்டி, மழலையில் கொஞ்சுகிறார், கேரளா, திருப்பூணித்துறையை சேர்ந்த பிராயகஸ். மூன்றாம் வகுப்பு படிக்கும் இவர், கோவையில் சமீபத்தில் நடந்த நாய் கண்காட்சியில், பக் இன பப்பியுடன் வலம் வந்தார். இவரிடம் பேசினோம்... என் வீட்டில், டால்மேஷன், ஹஸ்கி, ஜாக்ரசில் டெரியர், மின்பின், பக் என, நிறைய வெரைட்டி பப்பிகள் இருக்கின்றன. அப்பா சுதீஷ் தான், பப்பிகளுக்கு பயிற்சி அளிப்பார். பப்பியை எப்படி கண்காட்சிகளில் காட்ட வேண்டுமென சொல்லி கொடுத்தார். ஏற்கனவே, சமீபத்தில் ஊட்டியில் நடந்த நாய் கண்காட்சியில் ஜூனியர் ஹேண்டுலராக பங்கேற்று பரிசு பெற்றிருக்கிறேன். கோவையில் நடக்கும் கண்காட்சிக்கு என் பெஸ்ட் பிரண்டான, இந்த குளோரியஸ் லிட்டில் பிரின்ஸ் (பக்) உடன் வந்திருக்கிறேன். இந்த பக் இன பப்பிக்கு ஏழு வயதாகிறது. என்னை விட ஒரு வயது இளையவன். ஆனால், சேட்டையில் என்னையே மிஞ்சிவிடுவான். பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியதும், இவனுடன் விளையாடிய பிறகே ஹோம் ஒர்க் செய்வேன். மற்ற நேரங்களில் என் சொல் பேச்சு கேட்காது. ஆனால், கண்காட்சியில், போட்டி வளையத்தில் நின்றதும், கமெண்டுக்கு கீழ்படிய தயாராகிவிடும். சேம்பியன் பிரிவுகளில், பல பரிசுகள் கிடைத்துள்ளன. அடுத்தமுறை, டால்மேஷன், ஹஸ்கி பப்பியுடன் போட்டியில் பங்கேற்கலாம் என முடிவு செய்துள்ளேன். இவைகளை குளிப்பாட்டுவது, முகத்தில் இருக்கும் சுருக்கங்களில் உள்ள அழுக்குகளை எடுத்துவிடுவது, எண்ணெய் மசாஜ் செய்வது, பாதங்களை துடைத்துவிடுவது என எல்லாவற்றையும், அப்பாவுடன் சேர்ந்து செய்வேன். இதனால், அவைகளும் என்னுடன் விளையாடி கொண்டே இருக்கும். நான் வீட்டில் ஒரே பையன் என்பதால், பப்பிகள் தான் என்னுடன் விளையாடும். அவைகளோடு இருந்தால், போன், டி.வி., பார்க்க கூட தோன்றாது. நிறைய கதை சொல்லுவேன். என்னுடனே துாங்குவதால், பப்பிகள் தான் என் பெஸ்ட் பிரண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை