பணி நிமித்தமாக, கார்ப்பரேஷன் ஆபீசுக்கு சென்றிருந்த சித்ரா, மரத்தடியில் ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, 'அம்மா' உணவகத்துக்குள் நுழைந்தாள்.பின்தொடர்ந்து சென்ற மித்ரா, ''என்னக்கா... அடுத்த மேயர் யாராம்... விசாரிச்சீங்களா...'' என, நோண்ட ஆரம்பித்தாள்.''கார்ப்பரேஷன் முழுக்க இதுதான், 'ஹாட் டாபிக்'கா ஓடிட்டு இருக்குப்பா. புது மேயர் தேர்வில் ஜாதி அரசியல் நடக்குதாம். பெரும்பான்மை ஜாதியினருக்கு மறுபடியும் வாய்ப்பு தரக் கூடாதுன்னு, மத்த கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்குறாங்க. தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைகள்ல, சமூக நீதியை பத்தி நீட்டி முழக்கறதுனால, மத்த ஜாதிக்காரங்களுக்கு வாய்ப்பு தரணும்னு சொல்றாங்களாம்...''''ஜெயில்ல இருக்கறவருக்கு கட்சியில இப்போ முக்கியத்துவம் கொடுக்கறது இல்லையாம். சுவர் விளம்பரத்துல அவரோட பெயரை எழுதுறதை, கட்சிக்காரங்க கைவிட்டுட்டாங்க. பெயர் பலகையிலும் அவரது போட்டோ இருக்கறதில்லை,''''கலெக்டர் ஆபீசுல புகைப்பட கண்காட்சியில, 'மாஜி' போட்டோக்களை தவிர்த்திட்டாங்களாம். அதனால, அவரது 'ரெக்கமண்டேஷன்' இனி செல்லுபடியாகாதுன்னு சொல்றாங்க,''''ஏன்னா... அவரோட பரிந்துரையில மேயரை நியமிச்சாங்க. அதனால, கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் வந்துருக்கிறதுனால, புதியவரை தேர்ந்தெடுக்கறதுக்கு ரொம்பவும் மெனக்கெடுறாங்களாம். உளவுத்துறை மூலமாவும் 'ரிப்போர்ட்' வாங்கியிருக்காங்களாம். உடம்புக்கு என்ன?
''அதெல்லாம் சரி... மேயர் பதவியை ராஜினாமா செய்ற அளவுக்கு, அந்தம்மாவுக்கு அப்படியென்ன பிரச்னை... நெஜமாவே உடல் நலக்குறைவு இருக்குதா...''''ஹெல்த் பிராப்ளம் இருக்கறது உண்மைதான். டாடாபாத் பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடலுக்கு அடிக்கடி போயிட்டு வருவாங்க. அழுத்தம் தாங்காம கடிதம் கொடுக்க வேண்டியதா போச்சுன்னு, அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.கடிதத்துல, ஜூலை 1ம் தேதின்னு குறிப்பிட்டு இருக்காங்க; ஆனா, 3ம் தேதி கமிஷனருக்கு வந்து சேர்ந்திருக்கு. இடைப்பட்ட ரெண்டு நாள்ல, எப்படியாவது, சி.எம்.,ஐ நேர்ல சந்திக்க முயற்சி செஞ்சாங்களாம். ஆனா, சந்திக்கவே முடியலையாம். வேற வழியில்லாம கடிதத்தை உதவியாளர்கிட்ட கொடுத்து அனுப்புனாங்களாம்,'' என்றவாறு, உணவகத்தில் இருந்து வெளியே வந்தாள் சித்ரா. திரும்பி வரப்போறாரு ஆபீசர்
மாமன்ற கூட்டம் நடைபெறும் விக்டோரியா ஹாலுக்கு அருகே, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் ஜீப் வரிசையாக நின்றிருந்தது.அதைப்பார்த்த மித்து, ''நம்ம கார்ப்பரேஷன்ல கவுன்சிலை கவனிக்கிற பொறுப்புல இருந்த, முன்னாள் அதிகாரி மேல, கவர்மென்ட்டுல பர்மிஷன் வாங்காம சொந்த வீடு கட்டுனது; சட்ட அலுவலரா கூடுதல் பொறுப்பு பார்த்ததுக்கு, ஒரு லட்சத்து 65 ஆயிரம் அலவன்ஸ் வாங்குனதுன்னு ரெண்டு குற்றச்சாட்டு நிலுவையில இருக்கு. ஜி.ஓ., 152ல, சட்ட அலுவலர்ங்கிறது போஸ்ட்டிங்கை நீக்கிட்டாங்க. இல்லாத பதவிக்கு எப்படி அலவன்ஸ் கொடுக்கலாம்னு பிரச்னை வருது,''''இந்த மாதிரியான தப்புகளை ஆடிட் செக்சன்ல இருக்கறவங்க கண்டுபிடிச்சிட்டாங்க. இப்போ, அந்த தொகையை திருப்பிச் செலுத்திட்டாராம். ஆனா, முறைகேடு செஞ்சதுக்கு நடவடிக்கை எடுக்காம, வேறொரு கார்ப்பரேஷனுக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்க,''''இந்த முறைகேடு சம்பந்தமான 'என்கொயரி' அறிக்கைய, கமிஷனரிடம் கொடுக்காம, 'துணை'யான ஆபீசர் இழுத்தடிச்சிட்டு இருக்காங்களாம். குற்றச்சாட்டுக்கு ஆளான ஆபீசர், தனக்கு ஏ.சி., போஸ்ட்டிங் கொடுக்கணும்னு, கோர்ட்டுல கேஸ் போட்டிருக்காராம். சட்ட நுணுக்கங்களை நல்லா தெரிஞ்சவர்ங்கிறதுனால, சீக்கிரமாகவே போஸ்ட்டிங் வாங்கிட்டு வந்துருவாருன்னு சொல்றாங்க,''''அப்போ... என்ன தப்புப் பண்ணுனாலும், கொஞ்ச நாள் வெளியூருக்குப் போயிட்டு வந்தா, அவுங்க பண்ணுன தப்பு அழிஞ்சிரும்போலிருக்கே...'' என, கேட்டாள் மித்ரா. 'சரக்கு' பார்ட்டி
அதைக்கேட்டு சிரித்த சித்ரா, தனது மொபைல் போனுக்கு வந்த வீடியோவைக் காட்டினாள்.அதைப்பார்த்த வாயடைத்த மித்ரா, ''விருந்து தடபுடலா இருக்கே... கல்யாண 'பார்ட்டி'யா...'' என, கேட்டாள்.''இல்லை... மித்து, 'ரிட்டையர்மென்ட்' பார்ட்டி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஹைவேஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கற ஆபீசர்ஸ் பலரையும், வெவ்வேற ஊருக்கு துாக்கியடிச்சாங்க. அவுங்க செஞ்ச தப்பைக் கண்டுக்காம, பலனடைஞ்ச 'தலை'யான இன்ஜினியர் மட்டும், எங்க 'கரெக்ட்' பண்ணனுமோ, அங்க 'கரெக்ட்' பண்ணி தப்பிச்சிட்டாராம்,''''தரத்தைக் கவனிக்கிற பொறுப்புல இருந்த 'தங்கமான' இன்ஜினியர் மேல ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' இருந்திருக்கு. 'ரிட்டயர்டு' ஆவுறதுக்குள்ள அவரை எப்படியும் 'சஸ்பெண்ட்' பண்ணிருவாங்கன்னு, டிபார்ட்மென்ட்டுல பேசிக்கிட்டு இருந்தாங்க. அவரோ, 'ரூட்' பிடிச்சு போயி, பார்க்க வேண்டியவங்கள 'பார்த்து' சரிக்கட்டி, சைலன்டா ரிட்டயர்டு ஆயிட்டாராம்,''''அதுக்காக... ஆழியாறுல இருக்குற ஒரு ரிசார்ட்ஸ்ல, போன வாரம் சனிக்கிழமை நைட்டு செம்ம பார்ட்டி வச்சிருக்காரு. நம்ம ஊருல இருக்குற ஹைவேஸ் டிபார்ட்மென்ட் ஆபீசர்ஸ் பலரும் கலந்துக்கிட்டாங்களாம். ராவெல்லாம் 'ராவா' சரக்கு ஓடிருக்கு. விடிய விடிய ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்னு நடந்து, ஞாயித்துக்கிழமை காலை வரைக்கும் பார்ட்டி நடந்துச்சாம்.இந்த மாதிரி தப்பிச்சிக்கிறதுக்கு, எங்களுக்கு வழி தெரியாம போச்சேன்னு பல இன்ஜினியர்கள் புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, தேர் வீதி வழியாக, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா. லஞ்சம் வாங்க ஒருத்தர்
பத்திரப்பதிவு துறை அலுவலகம் முன் கூட்டம் அதிகமாக இருந்தது. அதை பார்த்த மித்ரா, ''அக்கா, மருதமலை அடிவாரத்துல, வடவள்ளி சார்பதிவாளர் ஆபீஸ் இருக்கு. கரன்சி இல்லைன்னா, எந்த வேலையும் நடக்காதாம். விஜிலென்ஸ்ல சிக்கிடக் கூடாதுங்கிறதுக்காக, பக்கத்துல இருக்கற டீக்கடையில ஒருத்தரை உக்கார வச்சிருக்காங்க. அவர்கிட்ட லஞ்ச பணத்தை ஒப்படைச்சா, பத்திரப்பதிவு ஆபீசுல வேலை கச்சிதமா நடக்குமாம்,'' கரன்சி வாங்குனா போதுமா
''இதே மாதிரியே, ஜமாபந்தியில ஆபீசர்ஸ் பாக்கெட்டு கரன்சியால நிறைஞ்சதாமே...''''ஆமாக்கா... உண்மைதான்! போன வாரம் காளப்பட்டி கிழக்கு மணியக்காரர் ஆபீசுல ஜமாபந்தி நடந்திருக்கு. ஆர்.டி.ஓ.,வுக்கும், தாசில்தாருக்கும் 'பங்கு' கொடுத்துட்டாங்களாம். அங்கிருந்த தண்டல்காரர் ஒருத்தர், 'அதான்... கரன்சி கொடுத்துட்டோம்ல... அப்புறம் எதுக்கு ஆயிரத்தெட்டு கேள்வி கேக்குறீங்க. நீட்டுற பைல்ல கையெழுத்து போடச் சொல்லுங்கன்னு, ஆபீசரைபத்தி பேசியிருக்காரு. அதைக்கேட்டு, ஆர்.டி.ஓ., ஆபீஸ் ஸ்டாப்ஸ் அதிர்ந்து போயிட்டாங்களாம்,'' தப்பிச்சிட்டாரு ஒருத்தர்
''அதெல்லாம் இருக்கட்டும். லோக்சபா எலக்சன் சமயத்துல பாலியல் 'கம்ப்ளைன்ட்' சம்பந்தமான 'என்கொயரி' செஞ்சாங்களே... என்னாச்சு...''''அதுவா... பாலியல் குற்றம் நடந்தது உண்மையாயிருச்சு. வடக்கு தாலுகா ஆபீசுல இருந்த ஊழியர் ஒருத்தரை, பொள்ளாச்சிக்கு துாக்கியடிச்சிட்டாங்க. அவரோட சேர்ந்து, 'சேட்டை' செஞ்ச டிரைவர் மேல இன்னும் நடவடிக்கை எடுக்கலை. பல விஷயங்களுக்கு டிரைவர் 'சப்போர்ட்'டா இருக்கறதுனால, நடவடிக்கை எடுக்காம இருக்காங்க. இந்த விவகாரத்தை 'என்கொயரி' செஞ்ச ஆபீசர்களுக்கு பெண் குழந்தை இருந்தா, இப்படி நடவடிக்கை எடுக்காம விட மாட்டாங்கன்னு, கலெக்டர் ஆபீசுல பேசிக்கிறாங்க,'' எங்க ஊர்ல மூனு கோஷ்டி
''ஆனா... அன்னுார் யூனியன்ல ஆளுங்கட்சி நெலமை வேற விதமா இருக்கு. வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில ஒரு கோஷ்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் தனபாலன் தலைமையில ஒரு கோஷ்டி, மாவட்ட கவுன்சிலரும் முன்னாள் ஒன்றிய செயலாளருமான ஆனந்தன் தலைமையில ஒரு கோஷ்டி செயல்படுது,''''இதுல, ஒரு கோஷ்டி நடத்துற கூட்டத்துல, இன்னொரு கோஷ்டிக்காரங்க கலந்துக்கறதில்லை. மாவட்ட செயலாளரோ, மினிஸ்டரோ வந்தா மட்டும் ஒன்னா வர்றாங்க. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கப் போகுது. அதுக்கு முன்னாடி, உட்கட்சி பூசலுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கணும்னு, உடன்பிறப்புகள் சொல்லிட்டு இருக்காங்க,'' பெர்மிட் கொடுக்க கரன்சி
''விவசாயிகள் வண்டல் மண் எடுக்கறதுக்கு, ஆர்டர் கொடுக்கறதை கவர்மென்ட் சைடுல தடபுடலா பங்சன் நடத்தி கொண்டாடுறாங்க. நம்மூர்ல உடன்பிறப்புகள் தலையீடு ஜாஸ்தியா இருக்குதாமே...''''ஆமாக்கா... நீங்க சொல்றது கரெக்ட்டுதான்! பவானிசாகர் அணைப்பகுதி நீர்த்தேக்கப் பகுதியில வண்டல் மண் எடுக்குறாங்க. பெர்மிட் வழங்குறதுக்கு, ஆளுங்கட்சிக்காரங்க தலையீடு அதிகமா இருக்கு. ஒரு வண்டிக்கு இவ்ளோ ரூபா தரணும்னு, வெளிப்படையா பேரம் பேசுறாங்க.வண்டல் மண்ணை எடுத்து லாரியில போடுறதுக்கான இயந்திரத்தையும், ஆளுங்கட்சிக்காரங்கள்ட்ட வாங்கணும்னு கண்டிஷன் போடுறாங்க. பேரத்துக்கும், கண்டிஷனுக்கும் ஒத்து வர்ற விவசாயிகளுக்கு மட்டும்தான், பெர்மிட் கொடுக்கறதா கம்ப்ளைன்ட் வருது,'' நிலைமை மோசமாகுதே
''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்துக்கு பின்னாடி, போலீஸ்காரங்க ரொம்பவே உஷாரா இருக்காங்களாமே...''''அடப்போங்கக்கா... நீங்க வேற... காமெடி பண்றீங்க. அவுங்க செய்ற கூத்தை கேட்டீங்கன்னா சிரிப்பீங்க... டாஸ்மாக்' கடைக்கு பக்கத்துல இருக்குற, 'பார்'கள்ல இல்லீகல் சேல்ஸ் நடக்குறதை தடுக்காம, தெனமும் ரெண்டு போலீஸ்காரங்க, மதுக்கடைக்கு பக்கத்துல காவல் காக்குறாங்க. யாரெல்லாம் அதிகாலையில, 'சரக்கு' வாங்க வர்றாங்களோ... அவுங்கள விரட்டி விடுறாங்க. இதெல்லாம ஒரு வேலையான்னு, போலீஸ்காரங்க புலம்பிட்டு இருக்காங்க,''''ஆனா, சூலுார்ல பிரைவேட் காலேஜ் பக்கத்துல இருக்குற ரெஸ்டாரென்ட்டுல, 24 மணி நேரமும் 'சரக்கு சேல்ஸ்' ஜோரா நடக்குதாம். காலேஜ் பசங்க 'பார்ட்டி' வைக்கிறதுக்கு, இந்த ரெஸ்டாரென்ட்டுக்கு வர்றாங்க. பக்கத்துக்கு குடியிருப்புவாசிகள் ரொம்பவே கஷ்டப்படுறாங்க. மாசந்தவறாம மாமூல் வர்றதுனால, போலீஸ்காரங்க கண்டுக்கறதே இல்லையாம்,''''அப்படியா...'' என்றபடி, செல்வபுரத்தை கடந்து, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.