உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) / கோவில் நிலம் கூறு ; லஞ்சம் தாறுமாறு

கோவில் நிலம் கூறு ; லஞ்சம் தாறுமாறு

''ஸ்வீட், காரம் கிடைக்குமா?''கேள்வி எழுப்பியவாறே வந்தாள் மித்ரா.''மித்து... வீட்லயே செஞ்சதால ஜி.எஸ்.டி., கிடையாது. ஆனா, கிரீம் பன் கிடைக்காது''''நீங்களுமாக்கா... இப்ப எல்லாம் ஸ்வீட் கடைக்குப் போனா, வாடிக்கையாளர்கள், 'பில்' பார்த்து, ஜி.எஸ்.டி., எவ்ளோன்னு விளக்கமா கேக்கறாங்களாம்''''மித்து... இதுவும் ஒரு விழிப்புணர்வுதான். கடைல போய் உணவுப்பொருட்கள் பாதுகாப்பை சோதிச்சுப் பார்க்கறாங்களோ இல்லையோ, திருப்பூர்ல வடக்கு - தெற்குன்னு ரெண்டு அலுவலருங்க இருக்காங்க.''ஒருத்தரு 20 வருஷமும், இன்னொருத்தரு மூனு வருஷமும் ஒரே இடத்துல வேலை பார்த்தாங்களாம். இவங்களுக்கு 'டிரான்ஸ்பர்' ஆர்டர் வந்திருச்சு... ஆனா, திரும்பவும் இங்க வந்தே தீருவோம்னு கங்கணம் கட்டுறாங்களாம்''''சித்ராக்கா... பசையான இடம்னா போக மனசு வருமா! வருவாய்த்துறைல வாகன டிரைவர்களை வழக்கமா மூனு வருஷத்துக்கு ஒருதடவை 'டிரான்ஸ்பர்' பண்ணிடுவாங்களாம்.''ஆனா, அதிகாரிகளுக்கு 'இணக்கமா' செயல்படறவங்க, சில அலுவலகங்கள்ல பசை போல ஒட்டியிருக்காங்க.''டிரான்ஸ்பர் உத்தரவு விவரங்களை முழுமையா ஆய்வு செஞ்சாலே, இதை 'ஈசி'யா கண்டுபிடிச்சுடலாம்.''டிரான்ஸ்பர்ல பாதிக்கப்படற வாகன டிரைவர்கள் புலம்பறாங்களாம்''மித்ரா ஆதங்கப்பட்டாள்.

நிலம் மீட்பு முடக்கம்

''மித்து... மாவட்டத்துல கோவில் நில மீட்புப்பணி திடீர்னு முடங்கிடுச்சாம். இடையில, கோவில் நிலத்தை என்.ஓ.சி., வாங்கி கிரயம் பண்றாங்களாம்.''அதிகாரிகளுக்குக் கவனிப்பைப் பொறுத்து தாராளமா என்.ஓ.சி., கொடுக்குறாங்களாம்.''சென்னை உயர் அதிகாரிக்கு புகார் போனதுக்கப்புறம், பதறியடிச்சு, இங்க இருக்குற அதிகாரிங்க அவர்கிட்ட சப்பைக்கட்டு கட்டியிருக்காங்க.''கோவில் நிலத்துக்கு என்.ஓ.சி., வழங்குனா போராட்டம் நடத்தப்போறதா பா.ஜ., காரங்க எச்சரிக்கை விடுத்துருக்காங்க. விட்டா கோவில் நிலத்தை எல்லாம் கூறு போட்ருவாங்க போலதான் தெரியுது''சித்ராவிடம் ஆதங்கம் தொனித்தது.

நாள் முழுக்க கஷ்டம்

''சித்ராக்கா... அரிசிக்கடை வீதில, சண்டே, கேப்டன் கட்சிக்காரங்க பொதுக்கூட்டம் நடந்துச்சாம். இரவுல நடந்த பொதுக்கூட்டத்துக்கு, காலைல மேடை ரெடியாயிடுச்சாம்.''காலைல இருந்தே வாகனங்கள் செல்றதுல சிக்கல் ஆயிடுச்சாம்.''கேப்டன் இருக்கேல, பொதுக்கூட்டம்னா, போக்குவரத்து பாதிக்கக்கூடாதுங்கறதுல கேப்டன் கவனமா இருப்பாரு...''ஆனா, நாள் முழுக்க இப்படிப் பண்ணிட்டாங்களேன்னு பொதுமக்கள் வருத்தப்படறாங்களாம்''''மித்து... இப்படியிருந்தாதான் கெத்துன்னு நெனச்சா என்ன பண்ண...''''சித்ராக்கா... கேப்டன் கட்சின்னுட்டு இல்ல... எல்லா கட்சிக்காரங்களுமே இப்படித்தான் பண்றாங்களாம். அரிசிக்கடை வீதில இருக்கிறவங்க புலம்பறாங்க''''உண்மைதான் மித்து...''ஆமோதித்தாள் சித்ரா.

'குடி'மகனை அழைத்து...

''மித்து... சிட்டிக்கு புதிய போலீஸ் கமிஷனர் வந்ததுல இருந்து, 24 மணி நேர மது விற்பனையையும், முறைகேடான விற்பனையையும் தடுத்து நிறுத்தீட்டாராம்.''ஆனாலும் அருகில் இருக்கிற சில பெட்டிக்கடைகள்லயும், புதர் போன்ற மறைவான இடங்கள்லயும் மது பாட்டில் விக்கிறாங்களாம். குறிப்பாக போதை ஆசாமிங்களை அந்த இடத்துக்கே அழைச்சுவந்து விக்கிறாங்களாம்.''இதையும் கமிஷனர் நெனச்சா தடுத்துடலாம்''''சித்ராக்கா... இன்னொரு விஷயம். பார்காரங்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டபின்னும் போலீஸ்காரங்க மாமூல் தரணும்னு மல்லுக்கட்டுறாங்களாம்.''விக்குதா... விக்கலையான்னு கவலையில்லைன்னு சொல்றாங்களாம்.''போலீசுக்கும், கட்சிக்காரங்களுக்கும் மாமூல் கொடுத்தே வெறுப்பாயிடுச்சுன்னு பார்காரங்க கடுப்பாகறாங்களாம்... கமிஷனர் நெனச்சா இதுக்கும் கடிவாளம் போட்டுடலாம்''மித்ரா கடுகடுத்தாள்.''மித்து... சிட்டி போலீஸ்ல வடக்குல இருந்த 'உதயமான' ஒரு அதிகாரியை தெற்குக்கு மாத்தினாங்க... அதிகாரியோட நடவடிக்கைல கடுப்பா இருந்த வடக்கு ஸ்டேஷன் போலீசுக்கு சந்தோஷமாயிடுச்சாம். ஆனா, இப்ப தெற்குல இருக்குறவங்க சோகமாயிட்டாங்களாம்''''சித்ராக்கா...தெற்கு ஸ்டேஷன்ல, 'அய்யா-கருப்பு' போலீஸ்காரர், வாகனத்தணிக்கை, ரோந்தின்போது, அபராதம் போடாம, தானே பாக்கெட்ல எல்லாத்தையும் நிரப்பிக்குறாராம். இந்த போலீஸ்காரருக்கு கடிவாளம் போட்டாதான் சரியா இருக்கும்''''மித்து... இது கமிஷனர் காதுக்குப் போச்சுன்னா அந்த போலீஸ்காரர் 'காலி'தான்''சித்ரா நகைத்தாள்.''சித்ராக்கா... ஆளும்கட்சில தெற்கு மாவட்ட வி.ஐ.பி.,யோட தம்பி இல்ல திருமண விழா, 'காளை' நகர்ல நடந்துச்சுல்ல...''''அதுல பிளக்ஸ்ல திருப்பூர் வடக்கு மாவட்ட வி.ஐ.பி.,யோட போட்டோவும் இடம் பெற்றிருந்துச்சாம்.''இதைப் பார்த்து மினிஸ்டர் தரப்பு, தெற்கு மாவட்ட வி.ஐ.பி.,ட்ட கோபிச்சுட்டதா சொல்றாங்க...''''மித்து... எல்லாம் அரசியல் படுத்தும்பாடு''தலையசைத்தாள் மித்ரா.

அதிகாரிக்கே இப்படியா?

''மித்து... வெண்ணெய் உற்பத்தி ஊர்ல இருந்து லிங்கேஸ்வரர் ஊருக்கு ஒன்றிய அலுவலக 'சிவ'மான அதிகாரி ஒருத்தர் டிரான்ஸ்பர் ஆனார். மூனு மாசத்துக்கு மேலா அவருக்கு சம்பளம் வரலையாம்.''முன்பு பணியாற்றிய ஊர்ல இருந்து சம்பளம் பெறுவதற்கான அடையாள எண்ணை மாவட்ட அலுவலகத்தில் இருந்து மாத்தி உத்தரவு போடணுமாம்.''இந்த உத்தரவை இழுத்தடிக்கிறாங்களாம். 'கவனிச்சாதான் முடியும்'னு சொல்றாங்களாம்''''அட... அதிகாரிக்கே இந்த நிலையா?''சித்ரா வெதும்பினாள்.''மித்து... உடுமலையில் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் ஆன 'குமாரரமேஷ்'ங்கற ஆபீசர், தடையின்மைச்சான்று பெற்று சில மாசம் முன்னாடி வேலைக்குச் சேர்ந்துட்டாராம்.''புகார்ல சிக்குனா டம்மி போஸ்ட்தான் கொடுப்பாங்களாம். ஆனா மாவட்ட அலுவலகத்தில தணிக்கைத்துறைல முக்கியமான பதவில அமர்த்திட்டாங்களாம். கறார் வசூலை மீண்டும் ஆரம்பிச்சுட்டாராம், அந்த அதிகாரி. இப்படியிருந்தா லஞ்சம் தாறுமாறா பாய்ஞ்சாதானே வேலையே நடக்கும்''''உண்மைதான் சித்ராக்கா... அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டில சிக்னலைக் கடந்து சற்று தொலைவில் புதுசா பேரிகார்டு போட்டிருக்காங்களாம். அது டாஸ்மாக் கடை முன்புறமாம்.''கடைக்கு வர்ற 'குடி'மகன்களுக்கு பிற வாகன ஓட்டிகளால இடையூறு ஏற்படக்கூடாதுங்கற அக்கறைதான் காரணம்ங்கறாங்க...''''நல்ல அக்கறைதான்''சிரித்தாள் மித்ரா.

மக்களுக்குத் தெரியாததா?

''மித்து... காந்தி நகர் பகுதியில, ஒரு வீதில இருந்து இன்னொரு வீதிக்கு செல்ற பாதையை மறைச்சு சுவர் எழுப்பிட்டாங்க... அதிகாரிகளுக்கு மனு கொடுத்து மக்கள் போராட்டம்னு இறங்குனாங்க... முதல்வருக்கும் மனு போட்டுட்டாங்க. சுவரை எடுக்க அதிகாரிகளும் களமிறங்கீட்டாங்க.''இதுக்கு இடையில தோழர் கட்சிக்காரங்களும் மனு கொடுத்து, தங்களால் தான் இது நடக்கப்போகுதுங்கற மாதிரி காட்டறாங்களாம். ஆனா, மக்களுக்குத்தான் எல்லாம் தெரியும்ல''''சரிதான் சித்ராக்கா... பேசிப்பேசி சோர்ந்து போச்சு... கிரீம் பன் தரச் சொல்லல... ஸ்வீட், காரத்தையாவது கண்ணுல காட்டலாம்ல''''ஜி.எஸ்.டி., இல்லாம தர்றேன்ல... அதனாலதான் லேட்டு''இருவரும் கலகலத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !