வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாம் ஊருக்கு உபதேசம் தான். இதெல்லாம் அ.வியாதியின் காதுகளுக்கும் கண்ணுக்கும் தெரியாமலா இருக்கும்?
மேலும் செய்திகள்
அமைச்சர் ஆன ஜூனியர்; அப்செட் ஆன சீனியர்!
26-May-2026
சித்ராவின் வீட்டுக்குள் மித்ரா நுழைந்ததுமே அரட்டைக் கச்சேரி துவங்கியது. ''சித்ராக்கா... விஜய் முதல்வரான உடனே பல டாஸ்மாக் கடைகளை மூடுனாங்கல்ல... சிட்டில மத்திய பஸ் ஸ்டாண்ட், வளர்மதி பகுதிகள்ல கடைகள் மூடுனதுனால, அங்க இருக்குற 11-11 பார் மற்றும் தனியார் பார்காரங்களுக்கு இப்போ ஒரே கொண்டாட்டமாம்... ''ஏன்னா அவங்களுக்கு சேல்ஸ் சும்மா அசுர வேகத்துல அதிகரிச்சிருக்கு. அந்த பார்களை நடத்துறவங்க யாருன்னு பார்த்தா தி.மு.க. - அ.தி.மு.க காரங்கதான். விஜய் முதல்வரானாலும் எதிர்க்கட்சிக்காரங்களா இருந்தாலும் தங்களுக்கு இப்படி வியாபாரம் கல்லா கட்டும்னு அவங்களே நினைச்சுப் பார்க்கலையாம். எந்த ஆட்சி வந்தாலும் இவங்களுக்கு வசூல் குறையுறதே இல்ல'' ''மித்து... வெள்ளியங்காட்டுல விஜய் பிறந்த நாள் விழாவுல, த.வெ.க. இளைஞரணி சார்புல நல உதவி வழங்க 1,001 பேருக்கு டோக்கன் கொடுத்திருக்காங்க. ''டோக்கன் இல்லாதவங்களும் உள்ள புகுந்துட்டாங்க. 'டோக்கன் இல்லைனா சேலை இல்லை'ன்னு நிர்வாகிகள் திருப்பியனுப்பவும் செம சண்டையாம்'' பெண் அதிகாரியின்மிரட்டல் டெக்னிக் ''மாவட்டப் பதிவுத்துறைல ஒரு பெரிய பெண் அதிகாரி பண்ற கூத்தைக் கேளுங்கக்கா. இவங்களுக்குக் கீழ் இருக்குற சார்பதிவாளர்கள், ஊழியர்கள் எல்லாம் மேடம் சொல்றபடி 'வசூல் வேட்டை' நடத்தி கொடுக்கலன்னா, டூபாக்கூர் பத்திரிகைக்காரங்களை வச்சு அவங்க மேல நியூஸ் வர வைப்பாராம்! ''நியூஸ் வந்ததும், அவங்க மேலயே துறை ரீதியான ஆக்ஷன் எடுப்பேன்னு மிரட்டுவாராம். ''அதனாலயே ஆபீஸ்ல இருக்குறவங்க மேடத்தைக் கண்டு பயந்து நடுங்குறாங்க. அந்த டூபாக்கூர் பிரஸ்காரங்க காசு கேட்டா கூட, 'இவரு போய் அந்தந்த அதிகாரியைப் பாருங்க'ன்னு கை காட்டிடுவாராம். ''அவங்களும் பயந்துட்டுப் பணத்தைக் கொடுத்துட்டு அழுறாங்க.'' ''அதேபோலத்தான் வணிக வரிலயும் மித்து. பெரிய கன்டெய்னர் லாரியில வர்ற சரக்கை, 9 கி.மீ தொலைவுக்குள்ள சின்ன வண்டிகளை வச்சு எடுத்துக்கலாம்னு பழைய அதிகாரி அப்ரூவல் கொடுத்திருந்தாராம். ஆனா அவரு இப்போ ரிட்டயர்டு ஆகிட்டாரு. ''புதுசா வந்த அதிகாரி, 'ரூல்ஸ் போட்ட ஆபீசர் ரிட்டயர்டு ஆகிட்டாரு, இனி நான் சொல்றதுதான் சட்டம். 'வே பில்' இல்லைனா பைன் போடுவேன், இல்லாட்டி 40கே, 50கே கொடு'ன்னு மிரட்டுறாராம். ''பனியன் நிறுவனத்தினர் நொந்து போய் போராட்டம் நடத்தத் தயாராகுறாங்க.'' இன்ஸ். கண்டாலேபோலீசுக்கு பயம் ''அக்கா... நம்ம மாநகரத்துல ஒரு பிரிவுல வேலைபார்க்கிற 'ரஞ்சித'மான இன்ஸ்பெக்டர் இருக்காரே, அவரு கீழ வேலை பார்க்கறதுனா போலீஸ்காரங்க பயப்படறாங்களாம். ''போன வாரம் அணைப்பாளையம் செக்போஸ்ட்டுக்கு ரவுண்ட்ஸ் வந்தப்போ, ஏட்டு ஒருத்தர் டூட்டில இல்லையாம். ''ஆனா விசாரிச்சப்போ இருக்கிறதா பொய் சொல்லியிருக்காரு. ஸ்பாட்டுக்கு வரவழைச்சுப் பார்த்தா, ஏட்டு நல்லா 'தண்ணி' அடிச்சிருக்காரு! ''அவ்ளோதான்... இன்ஸ்பெக்டர் அந்த ஏட்டோட சட்டை காலரைப் பிடிச்சு இழுத்துட்டுப் போய் ஹாஸ்பிட்டல்ல ஆல்கஹால் டெஸ்ட் நடத்தியிருக்காரு. ''கமிஷனரும் உடனே '3பி' சார்ஜ் கொடுத்துட்டாரு. இப்போ அந்த ஏட்டுக்கு டூட்டில குடிச்சது தப்புன்னு தோணலையாம், 'என்னை எல்லார் முன்னாடியும் சட்டை காலரைப் பிடிச்சு இழுத்துட்டாரே'ன்னு சக போலீஸ்காரங்ககிட்ட புலம்பிட்டு, இன்ஸ்பெக்டர் மேல புகார் கொடுக்கப் போறாராம். ''இந்த இன்ஸ்பெக்டர் ராத்திரியில கடை அடைக்கலைனா நேரா உள்ளே புகுந்து சிலிண்டரையே துாக்கிட்டு வந்துடுவாராம். ஒழுங்கா இருக்கணும்னு நினைக்கிறது கரெக்ட் தான், ஆனா நடத்துக்கிற விதம் ரொம்ப 'ரூடா' இருக்குன்னு கடைக்காரங்களும் போலீசும் புலம்புறாங்க.'' ''மித்து... அவிநாசி தாலுகா ஆபீஸ் முன்னாடி நகராட்சி நிர்வாகம் யாரையும் பிளக்ஸ் பேனர் வைக்க விடாது. ஆனா போன வாரம், வி.சி.க-வினர் தாலுகா ஆபீஸ் போர்டு, இ--சேவை போர்டையே மறைச்சுப் பெரிய வாழ்த்து பேனர் வச்சாங்க. ''நகராட்சி ஊழியர்கள் கூட அதை பத்திரமா கழட்டி தாலுகா ஆபீஸ்க்குள்ளயே பவ்யமா வச்சுட்டுப் போயிருக்காங்க'' அதிருப்தியை வெளிப்படுத்தினாள் சித்ரா. ''அரசு வக்கீல் பதவிக்குனு சொல்லி திருப்பூர் புறநகர்ல ஒரு பெரிய வசூல் வேட்டையே நடக்குதுக்கா. ''பண மோசடி நடப்பதா வாட்ஸ் ஆப் குரூப்கள்ல வக்கீல்களே எச்சரிக்கை போடுறாங்க. ''இதுல முக்கியமா ஒரு ஆளும் கட்சி மாவட்ட நிர்வாகியோட பேர்தான் அடிபடுது. ஏற்கனவே மதுக்கடை பார்ல மாமூல் கேட்டு ஆடியோ ரிலீஸ் ஆகி நாறுச்சே, அதே ஆளுதான்! கடுப்பான உள்ளூர் நிர்வாகிகள் இப்போ கட்சி தலைமைக்கு புகார் அனுப்ப ரெடியாகிட்டாங்க.'' சித்ரா ஆதங்கப்பட, மித்ரா வீட்டுக்குக் கிளம்பினாள்.
எல்லாம் ஊருக்கு உபதேசம் தான். இதெல்லாம் அ.வியாதியின் காதுகளுக்கும் கண்ணுக்கும் தெரியாமலா இருக்கும்?
26-May-2026