மேலும் செய்திகள்
வசூல் வேட்டையே லட்சியம்... மக்களிடம் அலட்சியம்!
03-Nov-2026
''மித்து, தீபாவளி எப்படி?'' கேட்டவாறு, ஸ்வீட்டுடன் வந்தாள் சித்ரா. சாக்லேட் சோன்பப்டியை எடுத்து சுவைத்த மித்து, ''சூப்பரா இருந்ததுங்க்கா.,'' என்ற மித்ரா, ''விவசாயிகள் புகாரை காது கொடுத்து ஆபீசர்ஸ் கேட்பதில்லையாம்,'' என ஆரம்பித்தாள். ''குண்டடம் பக்கத்துல போர்வெல், கிணறு உள்ள இடங்களில், மின் கம்பிகள் திருட்டு போகுதாம். போன வாரம், ஒரே நாளில் அஞ்சு இடத்தில் கைவரிசை காட்டிட்டு போயிட்டாங்களாம். இதப்பத்தி கம்ப்ளைண்ட் கொடுத்தா, ஸ்டேஷன்ல சி.எஸ்.ஆர். கூட போடற தில்லையாம். கம்பி திருடிய ஆட்கள புடிச்சுட்டு கேஸ் போட்டுக்கலாம் அதுக்கு முன்னாடி வேண்டாம். போய்ட்டு வாங்கன்னு அனுப்புறாங்களாம். இதனால, என்ன பண்றதுன்னு தெரியாம, விவசாயிகள் டென்ஷனா இருக்காங்க...'' ''விவசாயிகளுக்கு எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்னை தான் போல,'' ஆதங்கப்பட்ட சித்ரா, ''மித்து, வீரபாண்டி ஏரியாவுல இருக்கற ஒரு கிளப்ல தீபாவளிக்கு மொத நாள் ராத்திரி ஆபீசர் தலைமையில ரெய்டு போனாங்க. அதுல, எக்ஸ்பயரி டேட் முடிஞ்ச பீர் வித்ததை கண்டுபுடிச்சு, மூன்று கேஸ் பாட்டில்களை 'சீஸ்' பண்ணிட்டாங்க. இப்படி, எத்தனை நாளா வித்தாங்கன்னு போலீசார் விசாரிக்கிறாங்க. இந்த கிளப் இருக்கறது பப்ளிக்கு இடைஞ்சலா இருக்குன்னு கம்ப்ளைண்ட் வந்திருக்கறதால, அத மூடறதுக்கு ஸ்டெப்ஸ் எடுக்கறதா ஒரு பேச்சு பரவுது,'' என்றாள். போலீஸ் 'ஆசி'
''அக்கா, அவிநாசிக்கு பக்கத்துல, வஞ்சிபாளையம், வெங்கமேடு பிரிவுல இருக்கற ஒரு பேக்கரியில, போதை ஆசாமிகளுக்கு ஒரு டோக்கன் தர்றாங்க. அத பக்கத்துல பெட்டிக்கடையில் கொடுத்தால் ஹான்ஸ், குட்கா, கூல் லிப் என டோக்கன் கலருக்கு தகுந்த மாதிரி ஜிபே பண்ணி வாங்கிக்கலாம். அங்கேயுள்ள ஒரு சிக்கன் கடையில, குட்கா பொருட்களை ஸ்டாக் வெச்சு சேல்ஸ் பண்றாங்க. இது பூராவும் பூண்டி போலீஸ் ஆசியோட தான் நடக்குதாம். இந்த போதை கலாசாரத்தை பெரிய ஆபீசர் ஒழிப்பாரான்னு மக்கள் கேக்கறாங்களாம்...'' ''மித்து, தாராபுரத்துல நடந்த டிஜிட்டல் மோசடி விவகாரத்தில, அஞ்சு கோடி பணத்தை லவடிட்டாங்க. அதுலயும், ஒர்க் முடிஞ்சு, பில் செட்டில் ஆனதுக்கு அப்புறமா, இந்த தில்லுமுல்லு நடந்துருக்குது. 'ஒர்க் முடிஞ்சு மறுபடியும் எப்டி பில் கொடுக்க முடியும். எங்களுக்கு இதுல கொஞ்சங்கூட கனெக் ஷன் இல்லைன்னு, இங்கிருக்கற ஆபீசர் சொல்றார். ஆனா, நெருப்பில்லாம புகையுமான்னு, மக்கள் பேசிக்கறாங்க,'' ''அதுல சம்பந்தப்பட்ட ஆபீசர் மீது கம்ப்ளைண்ட் கொடுங்கன்னு போலீஸ் கேட்டதுக்கு, 'அதெப்படி முடியும். அக்கவுண்ட் மெயின்டெயின் பண்றது சென்னையில தான். பில் செட்டில் ஆன பின்னாடி, பணம் போறதுக்கு இவங்க எப்படி பொறுப்பாவாங்க. ஆபீசர் மீது ஒன்னும் செய்ய முடியாதுன்னு, கலெக்டர் தெளிவா சொல்லிட்டாராம்,'' கண்துடைப்பா?
''என்னென்னமோ, கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க,'' என சிரித்த மித்ரா, ''மங்கலம் பக்கத்துல, பொது சுத்திகரிப்பு நிலையத்தில இருந்து, நொய்யல் ஆத்துல கழிவுநீர் கலந்ததாக கூறப்பட்ட கம்ப்ளைண்டில், ராத்திரி கூட பாக்காம, பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டு ஆபீசர் சோதனை செஞ்சாங்க. ஆனா, ஒரு வாரமாகியும் எந்தவொரு ஏக் ஷனும் இல்ல. ஒரு வேள, தீபாவளி முடிஞ்சு, எடுப்பாங்கன்னு மக்கள் பேசிக்கறாங்க,'' ''காமனா இருக்கற பாளையத்துல டாஸ்மாக் பார் எப்பவுமே இல்லீகலா தான் ஓடுதாம். அது என்ன மேட்டர்னா, ரெண்டு டிஸ்டிரிக்ட் பார்டர்ல இருக்கறதால, போலீஸ் போகும்போது எல்லை தாண்டி பக்கத்து டிஸ்டிரிக்ட் ஏரியாவுக்கு போயிடறாங்க. அங்க எதிர்ப்பு வந்தா இங்க வர்றதுமா போக்கு காட்டறாங்க. இதுக்கு முக்கியமா போலீஸ் சப்போர்ட் தான் காரணம்னு, செந்திலண்ணாவும் சொல்றார் மித்து,'' ''அதே பல்லடம் பக்கத்துல பணிக்கம்பட்டி வில்லேஜ்ல கிராமசபாவுக்கு வந்த யூனியன் ஆபீசர், சூரிய கட்சிய சேர்ந்த மாஜி பஞ்., தலைவர பத்தி பாராட்டு பத்திரம் வாசிச்சாராம். இப்ப எதுக்கு அதெல்லாம்னு மக்கள் கேட்க, உஷாரான அதிகாரி, டாபிக்க மாத்திட்டாராம்,'' சொன்ன சித்ரா, வீட்டுக்கு புறப்பட்டாள்.
03-Nov-2026