உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / 2026 கவாசாகி இசட் - 900

2026 கவாசாகி இசட் - 900

'கவாசாகி' நிறுவனம், அதன் 'இசட் - 900' என்ற ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கை, 2026 மாடலுக்கு மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜி.எஸ்.டி., அமலான நிலையில், 2025 மாடல் பைக்கின் விலை, 10.18 லட்சமாக அதிகரித்து இருந்தது. ஆனால், 2026 மாடல் பைக்கின் விலை, 19,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் வரும் 948 சி.சி., இன் - லைன் 4 - சிலிண்டர் இன்ஜின் அதிகம் ஆற்றல் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய இன்ஜினுடன் ஒப்பிடுகையில், 1 ஹெச்.பி., பவர் (125 ஹெச்.பி.,) மற்றும் 1.2 என்.எம்., டார்க் (98.6 என்.எம்.,) அதிகரிக்கப்பட்டுள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், குயிக் ஷிப்டர், ரைட் மோடுகள், டிராக் ஷன் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் நீடிக்கின்றன. இரு புதிய நிறங்களில் வரும் இந்த பைக்கில், வேறு எந்த மாற்றமும் இல்லை. விலை ரூ. 9.99 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை