ராயல் என்பீல்டுடன் ஒரு ஹிமாலய பயணம்
'ராயல் என்பீல்டு' நிறுவனம், 'தி கிரேட் இன்டியன் கிராஸ்ரோட்ஸ் - நார்த் எடிஷன்' என்ற பத்திரிகையாளர்களுக்கான பைக் பயணத்தை நடத்தியது. இந்த 730 கி.மீ., பைக் பயணம் ஹிமாச்சல பிரதேசத்தின் இமயமலை பகுதியில் வசிக்கும் மக்கள், கலாசாரம், நிலப்பரப்பு, உணவு உள்ளிட்டவற் றை தெரிந்து கொள்ள உதவியது. இப்ப யணம் சண்டிகரில் தொடங்கி ஷிம்லா மாவட்டத்தின் தியோக், குல்லு, மண்டி, மணாலி வரை ஐந்து நாட்கள் நீடித்தது. நம் நாளிதழ் உட்பட சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, விஜயவாடா ஆகிய ஐந்து பெருநகரங்களை சேர்ந்த 16 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இப்பயணத்தில், ராயல் என்பீல்டின் ஹிமாலயன் 450, கொரில்லா 450, ஸ்கிராம் 4 50, கிளாசிக், ஹண்டர், மிட்டியர் 350 என ஆறு வகையான பைக்குகள் பயன்படுத்தப்பட்டன. வழக்கமான பயணத்தை தாண்டி, புதிய இடங்களுக்கு செல்லும் அனுபவத்தை வழங்க இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மலைவாழ் மக்கள், கலாசாரம் உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி, பொறுப்பான மற்றும் பாதுகாப்பான பைக் பயணத்தை ஊக்குவிக்க, இந்த முன்னெடுப்பு எடுக்கப் பட்டதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்தது.