உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / இ.க்யு.ஏ., 250+ பென்ஸின் மலிவு விலை மின்சார கார்

இ.க்யு.ஏ., 250+ பென்ஸின் மலிவு விலை மின்சார கார்

'மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா' நிறுவனம், அதன் மலிவு விலை மின்சார காரான 'இ.க்யு.ஏ., 250+' என்ற புதிய மின்சார எஸ்.யு.வி.,யை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதன் வினியோகம் 2025 ஜனவரி முதல் ஆரம்பமாகிறது.இந்த கார், பென்ஸின் அதிகம் விற்பனையாகும் ஜி.எல்.ஏ., காரின் மின்சார மாதிரி ஆகும். கிராசோவர் காரைப் போன்ற டிசைன், பென்ஸ் மின்சார காருக்கான பிரத்யேக கிரில், 19 அங்குல ஏ.எம்.ஜி., அலாய் சக்கரங்கள் ஆகியவை காரை ஆடம்பரப் படுத்துகிறது.உட்புறத்தில் சொகுசு லெதர் சீட்டுகள், ஸ்போர்ட்ஸ் ஸ்டியரிங், எலக்ட்ரானிக் சீட்டுகள், டூயல் ஜோன் ஆட்டோ ஏசி, 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்பு, டால்பி அட்மோஸ் வசதியுடன் 12 ஸ்பீக்கர் பர்மஸ்டர் சவுண்டு சிஸ்டம், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட் உட்பட பல பாதுகாப்பு வசதிகள் இந்த காரில் உள்ளன.விலை - ரூ. 66 லட்சம்சுந்தரம் மோட்டர்ஸ் - பென்ஸ்போன்: 93840 58651

விபரக்குறிப்பு

பேட்டரி 70.5 கி.வாட்., மோட்டார் பவர் 190 எச்.பி.,டார்க் 385 என்.எம்.,ரேஞ்ச் 560 கி.மீ.,டாப் ஸ்பீட 160 கி.மீ.,பிக் அப் (0 -100 கி.மீ.,) 8.6 வினாடி100 வாட் பாஸ்ட் சார்ஜிங் -- டி.சி., - 80 சதவீதம் - 30 நிமிடம்11 வாட் ஏ.சி., சார்ஜிங் - 100 சதவீதம் - 7 மணி 15 நிமிடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ