ஆடி எஸ்.க்யூ., 8 எஸ்.யூ.வி., 4 வினாடியில் 100 கி.மீ., வேகம்
'ஆடி' நிறுவனம், 'எஸ்.க்யூ., 8' என்ற சொகுசு ஸ்போர்ட்ஸ் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, 'க்யூ 8', 'ஆர்.எஸ்., க்யூ 8' கார்களுக்கு இடையில், நடு மாடலாக வந்துள்ளது. ஐந்து மீட்டர் நீளம் உள்ள இந்த காரில், 4.0 லிட்டர், ட்வின் டர்போ, வி8 பெட்ரோல் இன்ஜின் கிடைக்கிறது. 100 கி.மீ., வேகத்தை எட்ட வெறும் 3.1 வினாடி எடுக்கிறது. இந்த இன்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்பீடு 250 கி.மீ., ஆகும்.