உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / கூர்க்கா எஸ்.யு.வி.,க்கு ஆட்டோ கியர் பாக்ஸ்

கூர்க்கா எஸ்.யு.வி.,க்கு ஆட்டோ கியர் பாக்ஸ்

'போர்ஸ் மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'கூர்க்கா' எஸ்.யு.வி., காருக்கு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்க திட்டமிட்டுள்ளது.இதன் போட்டியாளர்களான 'மாருதி ஜிம்னி' மற்றும் 'மஹிந்திரா தார்' ஆகிய எஸ்.யு.வி.,கள் ஏற்கனவே ஆட்டோ கியர் பாக்ஸில் வருகின்றன.கரடுமுரடான பகுதிகள், மேடு பள்ளங்கள், கடினமான மலை மற்றும் காட்டுப் பாதைகள், இழுவை கிடைக்காத மணல் மற்றும் மற்ற நிலப்பரப்புகள் உள்ளிட்டவற்றில் மேனுவல் கியர் பாக்ஸை விட ஆட்டோ கியர் பாக்ஸ் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும். இதனால், கூர்க்கா எஸ்.யு.வி.,க்கு, 7 - ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோ கியர் பாக்ஸை பயன்படுத்த வாய்ப்புள்ளது.ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டால், காரின் விலை 1 லட்சம் ரூபாய் வரை உயரக்கூடும். விலை-(எதிர்பார்ப்பு) : 3 டோர் - ரூ. 18 லட்சம் / 5 டோர் - ரூ. 19 லட்சம்

இன்ஜின் 2.6 லிட்டர், 4 சிலிண்டர், டீசல்ஹார்ஸ் பவர் 89.84 எச்.பி.,டார்க் 250 என்.எம்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை