பஜாஜ் பல்சர் என்160 2026 புதிய 4 வால்வ் இன்ஜின், கூகுள் மேப்ஸ் வசதி
'பஜாஜ்' நிறுவனம், 'பல்சர் என் 160' பைக்கை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக், 'என் 160 எஸ்' மற்றும் 'என் 160 எஸ்.எஸ்.,' என இரு புதிய மாடல்களில் வந்துள்ளது இந்த 'எஸ்' மற்றும் 'எஸ்.எஸ்.,' மாடல் பைக்குகளுக்கு, புதிய 164.5 சி.சி., 4 - வால்வ், ஆயில் கூல்டு இன்ஜின் கிடைக்கிறது. பழைய பைக்கை விட, இன்ஜின் பவர் 2.5 ஹெச்.பி., அதிகம். 60 கி.மீ., வேகத்தை எட்ட, வெறும் 4.5 வினாடி எடுப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது. இந்த இன்ஜின் 5 - ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.