பென்ஸ் சி.எல்.ஏ., பி.இ.வி., 20 நிமிட சார்ஜில், 400 கி.மீ., ரேஞ்ச்
'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், 'சி.எல்.ஏ., 250 பிளஸ்' என்ற மின்சார சொகுசு செடான் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை உருவாக்கிய கார்களில், இது மிகவும் புத்திசாலித்தனமான கார் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நீளம் 4.7 மீ, ரியர் வீல் டிரைவில் வரும் இந்த கார், அந்நிறுவனத்தின் 800 வோல்ட் ஹை வோல்டேஜ் 'ஸ்கேட் போர்ட்' உற்பத்தி தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில், மின்சார கார் உட்பட எரிவாயு கார்களையும் உற்பத்தி செய்ய முடியும். இதில், 85.5 கி.வாட்.ஹார்., லித்தியம் பேட்டரி கிடைக்கிறது. முழு சார்ஜில், 792 கி.மீ., வரை பயணிக்கலாம். 240 கி.வாட்., பாஸ்ட் சார்ஜரில் 20 நிமிடம் சார்ஜ் செய்தால், 400 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம்.