உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி /  சிக்னஸ் - 2 இன் 1 ஹெல்மெட்

 சிக்னஸ் - 2 இன் 1 ஹெல்மெட்

ஹெல்மெட் உற்பத்தி செய்யும் 'ஸ்டட்ஸ்' நிறுவனத்தின் பிரீமியம் பிராண்டான 'எஸ்.எம்.கே., ஹெல்மெட்ஸ்', 'சிக்னஸ்' என்ற புதிய ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது, இந்நிறுவனத்தின் உயர்ந்த விலை ஹெல்மெட் ஆகும். நகர்புற பயன்பாடு மற்றும் டூரிங் செய்ய வசதியாக, 'ஹாப் மற்றும் புல் பேஸ்' என இரு வகையில் இந்த ஹெல்மெட்டை பயன்படுத்த முடியும். விபத்தின் போது, அதன் தாக்கத்தை உணராமல் பயணியை பாதுகாக்க, ஹெல்மெட் டின் உட்புறம் 'தெர்மோ பிளாஸ்டிக்' பொருளால் வடிவமைக்க பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் கண்ணாடி, எந்தவித கீறல் விழாமல், குளிர் காலத்தில் கண்ணாடியில் பனி படராமல் இருக்கும் திறனுடையது. உட்புறத்தில், சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்க சன் கிளாஸ் வழங்கப் பட்டுள்ளது.ஹெல்மெட் கழன்று வராமல் இருக்க 'டபுள் டி - ரிங்' பாதுகாப்பு, சூட்டை குறைக்க ஏர் வென்ட்டுகள், மென்மையான உட்புற லைனர் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் வந்துள்ளன. இந்த ஹெல்மெட், நான்கு நிறங்களிலும், ஐந்து மாடல்களிலும் கிடைக்கிறது. எதிர்பார்ப்பு விலை - ரூ. 17,000 முதல் ரூ. 20,000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ