மைல்டு ஹைபிரிட் டீசல் இன்ஜினில் வரும் பார்ச்யூனர், லெஜண்டர்
'டொயோட்டா பார்ச்யூனர்' மற்றும் 'லெஜண்டர்' ஆகிய இரு எஸ்.யு.வி., கார்களும், மைல்டு ஹைபிரிட் இன்ஜினில் கிடைக்கின்றன. இரு கார்களும் நியோ டிரைவ் என்ற மாடல் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவுகள் துவங்கி உள்ள நிலையில், வினியோகம் இந்த மாதம் முதல் துவக்கம்.'ஹைரைடர்' மற்றும் 'கிளான்ஸா' கார்களில் வரும், அதே மைல்டு ஹைபிரிட் அமைப்புதான் இரு கார்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில், 2.8 லிட்டர், 4 சிலிண்டர், 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, ஆட்டோ ஸ்டாப் வசதி வந்துள்ள நிலையில், காரின் மைலேஜ், 14 முதல் 16 கி.மீ., வரை தருகிறது.நியோ டிரைவ் அடையாளத்தை தவிர வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடல் காருக்கு, 360 டிகிரி கேமரா கூடுதல் அம்சமாக வழங்கப்படுகிறது.நியோ டிரைவ் விலை
பார்ச்யூனர் ரூ. 44.72 லட்சம் லெஜண்டர் ரூ. 50.09 லட்சம்டீலர்: Epic Toyota - 9500007575